டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்

Vinkmag ad

 

1. ‘ஏடிஸ் எஜிப்டி’ என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும். தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள்.
2. சித்த மருத்துவத்தில் டெங்குவை தடுக்க எளிமையான் வழிகள் இருக்கிறது. நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவில் வாங்கி பயன்படுத்தலாம்.
3. மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள் போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம். காபி, டீக்கு பதில் வீட்டிலேயே மூலிகை டீ செய்து குடியுங்கள்.
4. டெங்குவை பரப்பும் கொசு சற்று பெரிதாக இருக்கும். இது மாலை இறங்கும் வேளையில் மற்றும் அதிகாலை வேளைகளில்தான் அதிகளவு ஊர் சுற்றுகிறதாம். எனவே தினமும் மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டில் உள்ள ஜன்னல்களை அடைத்து விடுங்கள். காலை ஏழு மணிக்கு மேல் ஜன்னலை திறக்கவும்.
5 வீட்டை மற்றுமல்ல மனிதர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தினமும் குளிப்பது அவசியம். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் வேண்டுமானால் மருத்துவர் பரிந்துரைப்படி குளிக்காமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் மழைக்காலத்தில் சுடுதண்ணீரிலோ, குழாய் நீரிலோ கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஏனெனில் வியர்வை வாடை அதிகமாக இருக்கும் இடங்களில்தான் கொசுக்கள் தேங்குகிறது.
6. காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும். மசால் பூரி, பானி பூரி, பஜ்ஜி, சூப் போன்றவற்றை ரோட்டோரக்கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிருங்கள்.
7. முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைதான் டெங்கு பாடாய் படுத்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது முன் கூட்டியே தெரிந்தால் மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை,மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.
8. வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்கவிடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருத்துகளை தெளிக்கவும். கைகால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள்.
டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.

News

Read Previous

பனங்கருப்பட்டிதான் மிக உசத்தியானது

Read Next

முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: இன்று திறப்பு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *