வாழ்க்கை
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எங்கெங்கோ சென்று
என்னன்னவோ செய்து
எதை எதையோ பார்த்து
எதை எதையோ நினைத்து
எது எதற்கோ ஏங்கி
எது எதையோ தாங்கி
எது எதையோ தொடங்கி
எது எதையோ முடித்து
எது எதற்கோ சிரித்து
எது எதற்கோ அழுது
மென்று
விழுங்கி
விழுந்து
எழுந்து
நின்று
ஓடி
இங்கு
இன்று
இப்படி
ஒன்று சேர்ந்தோம்
……..இது எப்படி?
என்றோ எங்கோ
எப்படியோ முடியும் வாழ்க்கையில்தான்
எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்
விடையில்லா கேள்விகள்
கேள்வியில்லா விடைகள்
எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லா
இந்த வாழ்க்கையில்
இத்தனை இத்தனை அதிசயங்கள்!
– வேகண்