1. Home
  2. விக்கிப்பீடியா

Tag: விக்கிப்பீடியா

விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல்

அன்புடையீர், வணக்கம். கோயம்புத்தூர் பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் கணித்தமிழ்ப்பேரவையும் இணைந்து  நடத்திய இணையவழிப் பயிலரங்கில் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையைக்கேட்கவும், கருத்து கூறவும் அழைக்கிறேன். அன்புடன் ஜம்புலிங்கம் https://drbjambulingam.blogspot.com/2021/03/blog-post_27.html Dr.B. Jambulingam [Assistant Registrar (Retd), Tamil University] 19 S N M…

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆவணப்படம்

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆவணப்படம் | A documentary on Tamil Wikipedia – தமிழ் விக்கிப்பீடியா என்றால் என்ன? அதன் பங்களிப்பாளர்கள் யார்? அவர்கள் பெறும் பயன்கள் என்ன? ஒவ்வொரு தமிழரும் ஏன் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த ஆவணப்படம்.…

விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்போர் தமிழ்–தமிழர் தொடர்புடையபுகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம்.போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின்மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம்இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்றுசிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும்வழங்கப்பட உள்ளன. போட்டி, நவம்பர் 15, 2011 முதல் பிப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்http://ta.wikipedia.org/wiki/contest>  என்ற இணைய முகவரிக்குச் சென்று முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தகுந்த பதில்களைப் பெறலாம். குறிப்பு: 1. பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும். 2. தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டிக்காக தமிழ் விக்கிப்பீடியாவில் வலைவாசல் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.அதிலும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. அதற்கான இணைய முகவரி: http://tawp.in/r/2rbo