1. Home
  2. கவிதைகள் (All)

Category: கவிதைகள் (All)

” ஊனம்”

ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக் காணாத கண்கள்; ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்; உள்ளத்தால் ஊனமுற்றவைகளே.. அகம்பாவம் நிறைந்ததால், அகம்- பாவத்தில் உறைந்ததால்; சுகம் தேடும் உள்ளமே-…

சிந்திக்க மறந்த என்னவனே!

ஏ மனிதனே.. என் இனத்தவனே.. சிரிக்கத் தெரிந்த நீ.. ஏன் சிந்திப்பதே இல்லை?! இல்லாத வானத்தை வருணிக்கும் நீ.. இருக்கும் மானத்தை மறந்து விட்டாய்! அழகாய் வளர்ந்து வளர்ந்து மீண்டும் தேயும் நிலவு போல.. உயரே பறந்து பறந்து தரைக்கு இரங்கும் பருந்து போல.. கடலில்.. புரண்டு, எழுந்து,…

சாரல்!!

கதிர் தன்னொளி குறைத்திருக்க வானவில் வருகைக்காக மேகத்தை வானம் கரும்புடவையாய் உடுத்திருக்க; ஜில்லென்று மெல்ல வீசிய காற்றில் மண் வாசனையுடன் என் மனதை நனைத்தது மழையிலிருந்து சில துளி சாரல்! – ஷேக் இப்ராஹிம் shaikamjath0012@gmail.com

யார் நீ..?!

நண்பர்காள்.. உணர்ச்சிவசப்படுவது ஆரோக்கியமல்ல…! இது, சிரிப்பவர் உலகம்.. உன் கண்கள் மட்டும் ஒழுகுவதேன்..? இது, இருப்பவர் உலகம்.. திருவோட்டை நீ இன்னும் தழுவுவதேன்..? நண்பா.. முட்டைக்குள் கருவை வைத்தான்.. கருவுக்கு.. காற்றும் வைத்தான்.. ஆனால் உனக்கு.. ஆறாம் அறிவை வைத்தான்..! உனக்கென்ன.. சிறு பிராயம் விளையாட மட்டும் தானா..?…

கவனமாகயிரு

-கிளியனூர் இஸ்மத் இளைஞனே… வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து வெற்றி பெறவேண்டிய நீ சிலரது வார்தைகளில் உன்னை இழந்து விடாதே கவனமாகயிரு… மருத்துவனாக கணினியாளனாக கணிதமேதையாக விஞ்ஞானியாக பொறியாளனாக இதில் ஏதோயொன்றாய் நீ சமைந்திடவே உன்னைசமைத்தவர்களின் கனவு அதை கலைப்பவர்களின் கைகளில் சிக்கிவிடாதே கவனமாகயிரு… பள்ளிப் பாடநூல்களை சுமக்கவேண்டிய உன்கரத்தில்…

பிழை பொறுப்பாய் யாஅல்லாஹ்!

மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய் இறைவா உன்னருள் வேண்டும் இனிதாய் நலம் வேண்டும் வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே… பாவமென்னும் கடலில் வீழ்ந்து பல தீங்குகள் எம்மை சூழ்ந்து கலங்கும் நிலை ஆய்ந்து கனிவாய் உன்னருள் ஈந்து வல்ல நாயனே தூயனே…

தற்கொலைகள்

மரணத்தைக் கண்டு அஞ்சினாலும் கெஞ்சினாலும் மரணம் கட்டித்தழுவாமல் கடப்பதில்லை எந்தநேரத்திலும் மரணிக்கப்போகும் நமக்கு அது எப்போது என்பது மட்டும் திரையிடப்பட்டிருக்கிறது திறந்திருந்தால் மரணபீதியில் ரணமாகும் மனித வாழ்க்கைகள் இயல்பாய் தழுவவேண்டிய மரணத்தை சிலர் இனம் மனம் மதம் நிறம் மொழி பொருள் வறுமை இவைகளுக்காக பொறுமையிழந்து இன்னுயிரை இழப்பதற்கு…

பாலையான வாழ்க்கை

பாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்கவே பாலைவன நாட்டுக்கே பறந்து வந்த பறவைகள் நாங்கள்… இச்சையை மறந்தோம்; இன்பத் தாய்நாட்டை துறந்தோம்; பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்; பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்… இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்; இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்; “பொருளிலார்க்கு இவ்வுலகில்லை” பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்; “இல்லானை…

காதல் புனிதமானது!!!

நிலவினைப் பார் தன்னிலை தனிமையானதால் பாசத்திற்கு ஏங்கி தேய்கிறது; சூரியனைப் பார் தன்னிலை எல்லார்க்கும் தெரியும்படி பூமியைச் சுட்டெரிக்கிறது; மேகத்தைப் பார் தன்னுடைய உறவு ஒவ்வொரு நாளும் வெவ்வேரு விதமாய் இருப்பதை பார்த்து தன் ரத்தத்தை மழையாய் பொழிகிறது; இது இயற்கை கற்றுத்தரும் காதல் இலக்கணம்; உன்னைத் தொட்டு…

உறங்கிடு என் தோழியே!!!

இறைவன் நிலவினில் அழகினை கொடுத்தன் காரணம் தன் துணை  அதைவிட அழகென்று தெரியத்தான்; நட்சத்திரத்தில் ஒளியினை கொடுத்ததன் காரணம் செயற்கைத்துணைக் கொண்டவரை இயற்கையின் வெளிச்சம் காட்டத் தான்; உலகாசை அதிகம் கொண்ட மனிதர்க்கு பாடம் புகட்டத்தான் மேகம் நிலவினை மறைக்கிறது அதன் காரணம் எதுவும் நிலையல்லவே! கனவினில் நிஜங்களை…