1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பாலையான வாழ்க்கை

பாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்கவே பாலைவன நாட்டுக்கே பறந்து வந்த பறவைகள் நாங்கள்… இச்சையை மறந்தோம்; இன்பத் தாய்நாட்டை துறந்தோம்; பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்; பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்… இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்; இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்; “பொருளிலார்க்கு இவ்வுலகில்லை” பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்; “இல்லானை…

காதல் புனிதமானது!!!

நிலவினைப் பார் தன்னிலை தனிமையானதால் பாசத்திற்கு ஏங்கி தேய்கிறது; சூரியனைப் பார் தன்னிலை எல்லார்க்கும் தெரியும்படி பூமியைச் சுட்டெரிக்கிறது; மேகத்தைப் பார் தன்னுடைய உறவு ஒவ்வொரு நாளும் வெவ்வேரு விதமாய் இருப்பதை பார்த்து தன் ரத்தத்தை மழையாய் பொழிகிறது; இது இயற்கை கற்றுத்தரும் காதல் இலக்கணம்; உன்னைத் தொட்டு…

உறங்கிடு என் தோழியே!!!

இறைவன் நிலவினில் அழகினை கொடுத்தன் காரணம் தன் துணை  அதைவிட அழகென்று தெரியத்தான்; நட்சத்திரத்தில் ஒளியினை கொடுத்ததன் காரணம் செயற்கைத்துணைக் கொண்டவரை இயற்கையின் வெளிச்சம் காட்டத் தான்; உலகாசை அதிகம் கொண்ட மனிதர்க்கு பாடம் புகட்டத்தான் மேகம் நிலவினை மறைக்கிறது அதன் காரணம் எதுவும் நிலையல்லவே! கனவினில் நிஜங்களை…

காதலில் ஓர் பக்குவம்!!!

சூரியனும் நிலவும் ஒரு நாளில் ஒரு நிமிடம் மட்டும் நேரெதிர் பக்கமாய் சந்திப்பதற்கு காத்திருப்பது போல காதலில் பொறுமை அவசியம்; செடியில் பூப்பதை எல்லாம் தான் விரும்பினாலும் பூக்கலை ரசித்து விரும்புபவர்க்கு செடி விட்டு கொடுப்பது போல காதலில் விட்டு கொடுத்தல் அவசியம்; இறுதியில் காதல் என்பது காமம்…

மெளனங்கள்

முட்டைகளை ஒத்திருக்கின்றன மெளனங்கள். வெண்மையாலான ஓடு வெளித்தெரியும் சமாதானமாகவோ… சம்மதமாகவோ…! உள்ளிருப்பு தெரிவதில்லை உடையும் வரை! பொறுமை காத்து பிரசவிக்கச் செய்யலாம் புதிய பிறப்பை! எனினும்.. உடைக்கப்பட்டே உட்கொள்ளப்படுகின்றன பெரும்பாலும்! இன்னமும் உடைக்கப்பட முடியாமலிருக்கும் ஒற்றை முட்டையில் உறைந்திருக்கலாம் ஓர் மகா நிசப்தம். (உயிரோசை மின்னிதழில் வெளியாகியிருக்கிறது). —…

வெற்றி வேண்டுமா?

எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்’…

நட்பு

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் வானத்தை தீண்டும் மேகமில்லை நட்பு என்றும் ஒரிடம் இருக்கும் நட்சத்திரம் நட்பு; என் உடலில் ஒரு உலகம் உண்டு ஆனால் அதை இன்றுவரை நான் பார்த்தது இல்லை; அது ஒரு கனம் துடிக்க மறந்து விட்டால் நான் ஒரு பிணம் அதுபோல நட்பு…

முஸல்லாவே !

முஸல்லாவே ! முழுமனதாய் நானுன்னை மோகிக்கிறேன். யார் சொன்னது நீ வெறும் தொழுகை விரிப்பென்று? நீ சுவனத்திற்கு சுருக்குவழி காட்டும் ரத்தினக் கம்பளம் ! நன்மாராயம் ஈட்டித்தரும் அட்சயப் பாத்திரம் ! உன்னை விரிக்கையில் சொர்க்கத்தின் தூரம் சுருங்கி விடுகிறது ! பூக்கள் .. இதழ்களை விரிக்கையில் பூரிக்கிறது…

வாங்காதீர் வரதட்சணை!

கொடுப்பது குற்றம்-இதைவிட வாங்குவது மாபெரும் குற்றம் இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால் கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள் கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள் இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள் ஆண்களில் சில அறிவீனர்கள்! ஆத்திரமடையாதீர் தோழர்களே! அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள் ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே! பெண்ணைப் பேதையென நினைப்பது…

இனிவரும் நாள்கள்

கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக.. ….கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக! இனவாதம் மதவாதம் இறந்து போக ….இதயத்து குணத்தினையே யாரும் நோக்க.. பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை ….பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க.. நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன் ….நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்! கடந்துவந்த காலத்தை எண்ணிப்…