இராமநாதபுரம்
கமுதிஅருகே தலையில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை

கமுதிஅருகே தலையில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கத்தில் பேரூந்துக்காக காத்திருந்த சக்திவேல் (26) என்பவருடன் சிவக்குமார் வாக்குவாதம் செய்து கைகலப்பாக மாறி ரோட்டில் உருண்டதில் சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலை தலையில்குத்திவிட்டு ஓடிவிட்டார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் வழியிலேயே இறந்துபோனார் சக்திவேலுக்கும் சிவக்குமாருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு கபடி போட்டியின் ஸ்பான்சர் பெயரை மைக்கில் அறிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டது என்று கூறப்படுகிறது




