இராமநாதபுரம்

டிசம்பர் 24, கீழக்கரையில் முஸ்னது அஹ்மத் பாகம் 7 வெளியீட்டு விழா

டிசம்பர் 24, கீழக்கரையில் முஸ்னது அஹ்மத் பாகம் 7 வெளியீட்டு விழா

கீழக்கரை :

சென்னை, ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன், கீழக்கரை உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கம் ஆகியவை இணைந்து 24.12.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் முஸ்னது அஹ்மத் நபிமொழிப் பெருந்தொகுப்பு தமிழாக்கத்தின் பாகம் 7 நூல் வெளியீட்டு விழா வெகு விமரிச்சையாக கீழக்கரை சதக்கத்துல்லாஹ் அப்பா வளாகத்தில் நடக்க இருக்கிறது.

இந்த விழாவுக்கு சென்னை, புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா முனைவர் பி.எஸ். செய்யது மஸ்வூது ஜமாலி தலைமை தாங்கி, நூல் வெளியிட இருக்கிறார்.

ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷனின் மொழிபெயர்ப்பாளர் மௌலவி எஸ். அப்துல்லாஹ் பாகவி  திருமறை ஓதவும், கீழக்கரை, உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கத்தின் தலைவர் ஹெச். முஜிபுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷனின் இயக்குநர் எஸ். அஹ்மது மீரான் வரவேற்புரையும், இயக்குநர்கள் எஸ். இப்னு சஊத் மற்றும் டாக்டர். எம்.எஸ். அஷ்ரஃப் ஆகியோர் அறிமுகவுரையும் நிகழ்த்துகின்றனர்.

மொழிபெயர்ப்பளர் மௌலவி சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி நூலாசிரியர் அறிமுகவுரையும், மேலாய்வாளர் மௌலானா அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி நூலாய்வுரையும் நிகழ்த்துகின்றனர்.

முதல் ஆறு பிரதிகளை புரவலர்கள் எஸ்.எஸ்.எம். அஹ்மது ஹுசைன், டி.எ. அஹ்மது அப்துல் ஹமீது, எஸ். முஹம்மது யூசுஃப் சாஹிப், எஸ்.எஸ்.எம். ஃபாரூக், எஸ்.எம். சலாஹுத்தீன், என்.டி.எம். முஸ்தஃபா கமால் ஆகியோரும் பெறுகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் கே. நவாஸ் கனி எம்.பி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., கீழக்கரை, புதுப்பள்ளிவாசல் கதீப் மௌலானா முஹம்மது மன்சூர் ஆலிம் நூரி, முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப், சென்னை ஐடியல் முஸ்லிமா ஆன்லைன் அகாடமியின் முதல்வர் முனைவர் சித்தி லரீஃபா ஆலிமா சித்தீக்கிய்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி, கம்பம் பி.எம். பீர் முஹம்மஹ்டு பாகவி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

உடன்குடி எம். முஹம்மது யூசுப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுடன், எஸ். முஹம்மது ரஃபி நன்றியுரை நிகழ்த்துகிறார்.

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

எம்.எ. அஹமது சுலைமான், எம்.எஸ். சைஃபுத்தீன், சி.ஆர். ரியாஸ் நௌஷாத், எஸ்.எம்.எஸ். அப்துல் ஹமீது, எம்.ஹெச். ஜிஃப்ரி காஸிம் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button