இராமநாதபுரம்

கோழிக்கடையில் தீ விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை எல்.கே நகர் பகுதியில் அஞ்சுகோட்டையைச் சேர்ந்த வேலு மகன் முருகன் (32) இவர் இப்பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
இரவு ஏழு மணி அளவில் கடையை அடைத்து சென்றபோது சிறிது நேரத்தில் கடை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது உள்ளே முழு சிலிண்டர்கள் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து திருவாடனை தீயணைப்பு நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் பொறுப்பு ரஷீர்கான் தலைமையில் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ அணைப்பு வீரர்கள் உள்ளே இருந்த சிலிண்டர்களை லாவகமாக எடுத்து மீட்டனர். அதன் பிறகு அப்போது மக்கள் நிம்மதி அடைந்தனர். தீ எரிந்த கடையில் ஒரு லட்சம் ரூபாய் அளவிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது. இது  குறித்து திருவாடானை போலீசார் விசாரித்து வருகின்றனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button