சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர் மற்றும் பரமக்குடி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கீழப்பெருங்கரை, வெங்காளூர், மேலப்பெருங்கரை, பாலபச்சேரி, மேல – குடியிருப்பு, தடுத்தலாங் கோட்டை ஆகிய பகுதியில் இருந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் கமுதியில் திமுக மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில்
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.




