General News

கும்பகோணத்தில் அமீரக காயிதே மில்லத் பேரவை பொறுப்பாளர் ஆவை அன்சாரி இல்ல மணவிழா…….

அமீரக காயிதே மில்லத் பேரவை பொறுப்பாளர் ஆவை அன்சாரி இல்ல மணவிழா…….

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொறுப்பாளர் ஆவை முகம்மது அன்சாரி அவர்களின் புதல்வி சமீஹா அன்சர் மணமகளுக்கும் சோழபுரம் முஸ்தாக் அலி அவர்களின் புதல்வர் ஹாஜி. ஷாகுல் ஹமீது மணமகனுக்கும் கும்பகோணம் மஹாலட்சுமி மஹாலில் இன்று (13-10-2024) மணவிழா நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் முன்னாள் வக்ஃப் வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் Ex MP அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மணவிழாவில் ஆவணியாபுரம் பள்ளி வாசல் இமாம் முஹம்மது தல்ஹா மிஸ்பாஹி ஹஜ்ரத் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சோழபுரம் மற்றும் ஆவணியாபுரம் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அவை முகம்மது அன்சாரி வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் மௌலானா மௌலவி காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள், மௌலானா மௌலவி சேலம் அபுதாஹிர் பாகவி ஹஜ்ரத் அவர்கள், சமுதாய புரவலர் நோபுள் மரைன் ஷாஹுல் ஹமீது அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான மாண்புமிகு நவாஸ்கனி MP அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தீன்இசை தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் மணமக்களை வாழ்த்தி பாடினார்கள்.

அமீரக காயிதே மில்லத் பேரவை பொறுப்பாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் நன்றியுரை ஆற்றினார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் ராமலிங்கம் அவர்கள், திமுக மாவட்ட அவைத் தலைவர் நசீர் முகம்மது, திமுக குடந்தை ஒன்றிய செயலாளர் முத்து, இளைஞரணி பொறுப்பாளர் ஜிகேஎம் ராஜா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் நாகூர் நவுசாத் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மில்லத் இஸ்மாயில், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான், இணைச் செயலாளர் அப்துல் காசிம் ராஜாஜி, இணை பொருளாளர் ஜுல்பிகார், அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி, பொதுக்குழு உறுப்பினர் பண்டாரவாடை சித்தீக், நாகூர் ஷாஹா மாலிம், துணை செயலாளர்கள் முகம்மது உசேன், வழுத்தூர் நத்தர்ஷா, தாவூது பாட்சா, திப்பு சுல்தான், யூசுப் அன்சாரி மாணவரணி மாநில செயலாளர் ஷபீக் அகமது, உள்ளிட்ட மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், ஏராளமான உலமா பெருமக்கள், சமுதாய பிரமுகர்கள், ஜமாஅத் நிர்வாகிகள், ஜமாஅத் தார்கள், நண்பர்கள் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button