முதுகுளத்தூர் பகுதியில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு
முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் பகுதியில் அடிக்கடி அறிவிக்கபடாத மின்வெட்டு ஏற்படுகிறது. அந்த நேரங்களில் அரசு, தனியார் அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகங்களுக்கு “மெயில்’ அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதனால், முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் பகுதி பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில், கவர்ச்சிகரமான சேவைகளை தரும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின், “இன்டர்நெட்’ இணைப்பு களுக்கு, மாறி வருகின்றனர்.