உலகளாவிய தமிழ்க்கல்வி

Vinkmag ad

 

 

(புரட்டாசி 26, 2045 / 12 அட்டோபர் 2014 தொடர்ச்சி)

 

பாடத்திட்டங்கள்

பாடத்திட்டங்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு முறையில் அமைக்க விரும்புவதே இயற்கை. என்றாலும் கலந்து பேசி சீரான முறையைக் கடைப்பிடிப்பது நன்று. பாடத்திட்டங்கள் மாறினாலும் அவற்றின் அடிப்படை நோக்கத்தில் மாறுபாடு கூடாது.எனவே, பின்வருவனவற்றில் கருத்து செலுத்த வேண்டும்.

 granthamvendel02

தமிழ் நெடுங்கணக்கில் – எழுத்துகளில் – கிரந்த எழுத்துகளைச் சேர்க்கக்கூடாது.   கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாத – அயற் சொற்களைக் கலக்காத தலைமுறையை உருவாக்க இஃது உதவும். குறிப்பிட்ட நிலைக்குப்பின்னர் கிரந்த எழுத்துகளைப் பற்றிக் கூறும் பொழுதுகூட, அவற்றைத் தமிழ் எழுத்துகள் பட்டியலில் சேர்க்கக்கூடாது. பெரும்பாலோர் கிரந்த எழுத்துகளைத் தமிழில் சேர்ப்பதன் மூலம் தமிழ்மொழி வரலாற்றைச்சிதைப்பதையும் தமிழுக்கு இழுக்கு தேடுவதையும் உணரவில்லை. எனவே, அயலெழுத்துகள் கலக்காத தமிழையே கற்பிக்க வேண்டும்.

kirnatham_grantham_virumbel

தமிழரல்லாத, தமிழ்நாட்டவரல்லாத தலைவர்கள்பற்றிப் பொதுநிலைக்கல்வியில் கூறத் தேவையில்லை. தமிழ் வேந்தர்கள், மன்னர்கள், வள்ளல்கள், புலவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் முதலானோரைப்பற்றிமட்டும் தெரிவிக்க வேண்டும்.   கொடைக்குக் கருணன், வில்லுக்கு விசயன் என்பன போன்று கற்பிக்காமல் தமிழ் வள்ளல்கள், மன்னர்கள், அரசர்கள் சிறப்பை அறியச் செய்ய வேண்டும்.இவற்றைப் பொதுவாக அனைவரும் அறியும் வகையில் கற்பிப்பது நன்று. மேலும் அந்தந்த நாட்டிலுள்ள தமிழ் ஆன்றோர்களைப்பற்றி அந்தந்த நாட்டுப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

 

எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், அயற்சொற்கள் இல்லாதவகையில் பாடம் அமைய வேண்டும். சான்றாகச் சில பாடங்களில் இடையின ரகரம் வரவேண்டிய இடத்தில் வல்லின றகரம் பயன்படுத்தப்பெறுகிறது.டவல்- டவல் என்று ஆங்கிலச் சொல்லே குறிக்கப் பெறுகிறது.(துண்டு அல்லது துவட்டி எனத் தமிழில் குறிக்கலாம் அல்லவா?)இத்தகைய தவறுகள் நேரா வண்ணம் இருந்தால்தான் தமிழ்க்கல்வி செம்மையாக இருக்கும்.

 

பேச்சுவழக்கிற்கு முதன்மை அளிக்கக்கூடாது.   தமிழ் படித்துவிட்டுப் பேசுவது புரியாமல் போய்விடக் கூடாதே என எண்ணக்கூடாது. இப்பொழுது பயில்பவர்கள் திருத்தமாகப் பேசக்கற்றுக் கொண்டால் தங்களுக்குள் அவ்வாறே பேசித் தமிழை வாழ வைப்பர். கொச்சை வழக்கில் பேசுநரும் தங்களைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். பேச்சு வழக்கு என்பது இடத்திற்கு இடம் மாறுபடும். அவற்றிற்கெல்லாம் நாம் இடம் தந்து ஊக்குவிக்கக் கூடாது. மொழி அறிவியலறிஞர் தொல்காப்பியர் சிறந்த மொழியியல் அறிஞரும் ஆவார். அவர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டதால்தான் நமக்குத் தொல்காப்பியம் கிடைத்தது. ஆனால், இன்றைய மொழியியல் அறிஞர்களில் பெரும்பான்மையர் பேச்சு வழக்கிற்கு முதன்மை தருவதாகக் கூறிக்கொண்டு தமிழைச்சிதைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் திருந்த வேண்டும். அவர்களைப் பாடத்திட்டக்குழுவில் சேர்க்காமல் இருந்தாலே தமிழ் செம்மையுறும்.

மொழிப்போர்பற்றியும் ஈழ விடுதலைப்போர்பற்றியும் பாடங்களில் சேர்க்க வேண்டும்.அந்தந்த நாட்டில் நடைபெற்ற தமிழர் போராட்டங்கள்பற்றியும், அந்தந்த நாட்டு விடுதலைப்போரில் அல்லது வளர்ச்சியில் தமிழர் பங்களிப்புபற்றியும் பாடங்கள் அமைய வேண்டும்.நம் வரலாறு, பண்பாடு ஆகியன அறியாமல்தான் பலர் தமிழைப் புறக்கணிக்கின்றனர். எனவே, நம் முன்னோர் குறித்த வரலாறும் இக்காலத்தில் தொண்டாற்றுநர் வரலாறும் அறியச் செய்ய வேண்டும்.

 

எல்லா மொழிகளுக்கும் மூத்த தமிழ்மொழியின் காலத்தையும் தமிழ் இலக்கியங்களின் காலங்களையும் பின்னுக்குத் தள்ளக்கூடாது. மூவாயிரம் ஆண்டுத் தொன்மை மிக்கதானதொல்காப்பியக் காலத்தைக் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனத் தவறாகவும் இதுபோல், சங்க இலக்கியம், திருக்குறள் காலங்களைப் பின்னுக்குத் தள்ளியும் இணையவழிக் கல்விகளில்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை உடனே நீக்க வேண்டும். தமிழ்இணையக்கல்விக் கழகத்தில் தமிழில் புலமையுடையோரையே அமர்த்தி இவற்றை ஒழுங்குபடுத்தும் பணியை ஆற்றச் செய்ய வேண்டும்.

இவ்வாறெல்லாம் விரிவாகத் தமிழ்க்கல்வி இருக்க வேண்டும் என்றாலும் அடிப்படைக்கல்வியில் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும். தமிழர் எல்லார்க்கும் தமிழ்க்கல்வி கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.அடிப்படைக்கல்வி அறிந்தோர் ஆர்வத்தால் படிப்பதற்குத்தான் இவ்விரிவானதிட்டம்.அடிப்படைக்கல்வியைத் தருவதே பொதுநிலைக்கல்வித்திட்டத்தின் நோக்கம். இதனைக் கற்போரை ஊக்கப்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும்.

 

தமிழ்த்தேவையை உருவாக்க வேண்டும்.

தமிழராகப் பிறந்தோர் தமிழறிதல் வேண்டும் என்பது கட்டாயக்கடப்பாடுதான். எனினும் தமிழுக்கான தேவை நிலைத்தால்தான் ஆர்வத்துடன் தமிழ் கற்கும் சூழல் ஏற்படும்.தமிழ்நாட்டிலுள்ள அயலார், தமிழறியார், பொதுநிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்றாலே வேலைவாய்ப்பு என்ற நிலையை உருவாக்க வேண்டும்.தமிழ்நாட்டிலேயே தமிழ் முழுமையான ஆட்சிமொழியாகவோ, கல்விமொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ, இசை மொழியாகவோ, கலை மொழியாகவோ வணிக மொழியாகவோ அலுவலக மொழியாகவோ அன்றாடப் பயன்பாட்டு மொழியாகவோ இல்லாத பொழுது தேவையுள்ள மொழியைப் படிப்பதில்தான் ஆர்வம் காட்டுவர். எனவே, ‘தமிழ் படி’, ‘தமிழைப் படி’, என்றெல்லாம் சொல்லும்நாம் தமிழ்நாட்டில் தமிழே தலைமை தாங்கவும் தமிழரே முதன்மை தாங்கவுமான சூழலை உருவாக்க வேண்டும்.

 

‘தமிழறியாதானுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!’ என்னும் சூழல் இருந்தால்தான் தமிழ் தமிழ்நாட்டின் மொழியாகவாவது இருக்கும். தமிழ்நாட்டில் தமிழ்தான் எதிலும் என்ற நிலை வந்து விட்டால் உலக அளவிலும் தமிழின் தேவை மதிப்பு உயரும். எல்லா நாட்டு அரசாங்கங்களுமே தமிழ்க்கல்வியில் கருத்து செலுத்துவர். நாம் தனிப்பட்ட முறையில் தமிழ்க்கல்விக்கென உழைக்க வேண்டா! தமிழ்க்கல்விக்கான படைப்புகளில் கருத்து செலுத்தினால் போதும்.

 

தமிழ்க்கல்விக்கான சில இணையத்தளங்கள்

 

சில வலைத்தளங்களில்

(https://sites.google.com/site/soyouwanttolearnalanguage/tamilhttp://tamilnanbargal.com/tamil-blogs/learn-tamil-%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF)

தமிழ்க்கல்விக்கான இணைப்புகள் தரப்பட்டுள்ளன. சற்று விரிவாக இங்கே தரப்படுகின்றது. மேலும் உள்ளவற்றை இணையத்தில் அறியலாம். தமிழ்கற்பதற்கான நூல்கள் பட்டியலும் இணையம் மூலம் அறியலாம். அவற்றை அறிந்து வாய்ப்புள்ளவர்கள் அவற்றை வாங்கிப் படிக்கலாம்.

 

  1. தமிழ் இணையக்கல்விக்கழகம் http://www.tamilvu.org/stream/lrntml/index.htm
  2. ஃகியூகாட்டுவில்லியம்சுhttp://hugotwilliams.wordpress.com/
  3. அறிவியல் புலம்http://fos.cmb.ac.lk/blog/
  4. ஆங்கில மூலம் தமிழ் http://www.youtube.com/channel/UCiJBsEttv5Kvv0grhQDn73A
  5. ஆங்கிலம்-தமிழ்http://www.linguanaut.com/english_tamil.htm
  6. ஆங்கிலவழியில் தமிழ்http://www.youtube.com/channel/UCSnqrNmY4oVK6HKQD9aBLcg
  7. இ.மொழிகள் அமைப்பு: தமிழ் http://ilanguages.org/tamil.php
  8. இணைய மூலம் தமிழ்http://learntamilonline.weebly.com/blog.html
  9. இணையப்புத்தகம்- தமிழைப்படி http://www.ibiblio.org/learntamil/
  10. இந்தியமொழிகளின் நடுவண்பயிலகம் http://www.tamil-online.info/
  11. உரையாடல் மூலம் தமிழ் பேசhttp://www.mylanguageexchange.com/Learn/tamil.asp
  12. எம்மொழியும்கற்கலாம்-தமிழ் http://www.masteranylanguage.com/cgi/f/pCat.pl?tc=MALTamil
  13. என்மொழிகள் அமைப்பு – காணொளிhttp://mylanguages.org/tamil_video.php
  14. என்மொழிகள் அமைப்பு -தமிழ் கற்பீர் http://mylanguages.org/learn_tamil.php
  15. என்மொழிகள்- தமிழைப்படி http://mylanguages.org/learn_tamil.php
  16. தஇககhttp://www.youtube.com/watch?v=AD16UXVAx7o&list=PL49F887A793777A01
  17. தமிழ் அஇஉ http://www.youtube.com/watch?v=tC3B3t0iR6w
  18. தமிழ் அகரவரிசை அறியhttp://www.wikihow.com/Learn-Tamil-Alphabets
  19. தமிழ் எழுத்து படிப்போர் ஏடுhttp://sites.la.utexas.edu/tamilscript/
  20. படிப்போம் தமிழ்க்கல்வி http://tamilo.com/learn-tamil-education-57.html
  21. கூகுள்அமைவம்-தமிழ் கற்க https://sites.google.com/site/tamilkarka/
  22. தமிழ் படிக்க-வலைப்பூ(தள இணைப்புகளுடன்)http://learning-tamil.blogspot.in/2009/10/favorite-tamil-resources.html
  23. தமிழ் பேசலாம் எளிதில் https://play.google.com/store/apps/details?id=com.gantec.tamilspeak
  24. தமிழ் வாசிக்க http://www.ukindia.com/zip/ztm1.htm
  25. தமிழ்உரையாடல்(பரிமாற்றம்)http://www.conversationexchange.com/s_map/learn.php?language=Tamil
  26. தமிழ்க்குட்டிhttp://tamilkutti.wordpress.com/about/
  27. தமிழ்க்கியூபு http://tamilcube.com/tamil.aspx
  28. தமிழ்த் தொகுப்புhttp://www.tamildigest.com/
  29. தமிழ்த்தொடர்மொழிகள் http://www.omniglot.com/language/phrases/tamil.php
  30. தமிழ்ப்படிப்பு வலைப்பூhttp://learning-tamil.blogspot.in/
  31. தமிழ்ப்படிப்பு-காணொளிவழிhttp://www.youtube.com/watch?v=iPml3bBB7YY
  32. தமிழ்ப்படிப்பு-படிப்பிப்புவலை http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/
  33. தமிழ்ப்பிரியன்http://useful.tamilpriyan.com/learn-tamil.html#.VAmJyRZjOSo
  34. தமிழ்மழலை http://kidsone.in/tamil/
  35. தமிழ்மொழி http://www.thetamillanguage.com/
  36. தமிழம் வலைhttp://www.thamizham.net/kal/ttenglish/index-u8.htm
  37. தமிழிடம் வலைப்பூhttp://tamilplace.blogspot.in/
  38. தமிழைப்படி வலைப்பூ-எவ்வாறு தமிழ் கற்கலாம் http://learning-tamil.blogspot.com/2010/01/how-to-learn-tamil-alphabet.html
  39. தெலுங்குதமிழ் வழிகாட்டிhttp://telugutamilguide.blogspot.in/
  40. நான்தமிழ்படிக்கிறேன் http://ilearntamil.com/learntamilonline/blog/
  41. பன்னிருவாரத்தில் தமிழ்க்கல்விLearning Tamil in 12 weeks: travel writing
  42. முகநூல்: கல்விஇணையத்தளம் தமிழ் படிப்போம்! படிப்பிப்போம்! காணுரைகளுடன்https://www.facebook.com/pages/Lets-Learn-Teach-Tamil-Language/255407464487841
  43. முகநூல்: தமிழ் கற்பீர்-கல்வி https://www.facebook.com/LearnTamilOnline
  44. முகநூல்: தமிழ் கற்பீர்-யாழ்- கல்விவலைத்தளம் https://www.facebook.com/thamilpadipom
  45. முகநூல்: தமிழ் படி -ஆக்கமும் பணியும் https://www.facebook.com/pages/Learn-Tamil/131815133527937?
  46. முகநூல்: தமிழ் படி- தமிழ்ப் பயிற்சி https://www.facebook.com/tamilearn?
  47. முகநூல்: தமிழ் மொழி கற்பீர் https://www.facebook.com/groups/761522873880821/
  48. முகநூல்: தமிழ், இந்தி படிப்பீர் https://www.facebook.com/LearnTamiHindi?
  49. முகநூல்: தமிழ்மொழி கற்போம் https://www.facebook.com/LetsLearnTamil?
  50. முகநூல்: நித்தியானந்தா பற்றர்கள் தமிழ் கற்பீர் https://www.facebook.com/NithyanandaDevoteesLearnTamil?
  51. முகநூல்: படம்மூலம் தமிழ்ச்சொல் கற்பீர் https://www.facebook.com/VisualTamil?ref=br_rs or  www.visualtamil.com
  52. மொழிகள் மனை: ஆங்கிலம்-தமிழ் http://www.languageshome.in/English-Tamil.htm
  53. மொழித்தொடர் http://www.languagereef.com/learn_tamil.php?lang=TAMIL&list=alphabets
  54. தமிழ் மித்திரன் http://www.tamilmitra.com/showpage?pageid=ta.home
  55. குழந்தையர் நூலகம்(இணைய நேரலை)http://kids.noolagam.com/
  56. தமிழ்க்கல்விக்கழகம்http://www.tamilacademy.com/
  57. அடுத்த தலைமுறையின் தமிழ் http://www.tamilunltd.com/
  58. தமிழ்க்களம்http://tamilkalam.in/
  59. தமிழ் கற்க https://sites.google.com/site/tamilkarka/
  60. புத்தகவழித் தமிழ் கற்போம்http://www.scribd.com/doc/17063097/Learn-Tamil
  61. பிரெஞ்சு மூலம் தமிழ்http://www.indereunion.net/utile/langx.htm
  62. தொகுகற்பிப்புhttp://omniglot.com/
  63. மொழித்தேர்ச்சிக்கான சிறப்பு ஆய்வுமையம்(மினசோட்டா பல்கலைக்கழகம்) http://carla.acad.umn.edu/index.html
  64. தமிழ்த்தொடர்நூல் http://wikitravel.org/en/Tamil_phrasebook
  65. தமிழ்&பொறியியல் கல்வி http://ilanko.org/tamil
  66. விடுமுறைக்காலம்-தமிழ் கற்போம் http://www.indovacations.net/english/learn-tamil.htm

 

மேற்குறித்த பட்டியலைப் பார்க்கும்பொழுது இப்போதும் தமிழ் கற்பிப்போர் பரவலாக உள்ளமையை அறியலாம். மேலும் பல தளங்கள், வலைப்பூக்கள், முகநூல் பக்கங்கள் தமிழ் கற்பிக்கும் தொண்டில் ஈடுபட்டுள்ளன. கட்டணமுறையில் கற்பிக்கும் தளங்களும் உள்ளன. பென்சில்வேனியா பல்கலைக்கழகம் போன்று மாணாக்கர்களுக்காகப் பாடங்களை இணையத்தில் தருவோரும் உள்ளனர். தமிழ் படிப்பதற்கான நூல்கள் தரவு அமைப்புகளும் விற்பனை இணைப்புகளும் உள்ளன. இத்தகையோர் ஒன்று சேர்ந்து சீரான திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும் உலக மக்கள்இவற்றைப்பயன்படுத்தித் தமிழறிந்த உலகை உருவாக்க வேண்டும் என்பதுமே நம் வேண்டுகோள்.

இனியேனும் தமிழைச் சிதைக்காமல் இருக்க வேண்டும் என நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய முயற்சிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் மூலம் அனைத்து நாடுகளில் உள்ளோரும் அனைத்துநிலைகளிலும்தமிழ் கற்பதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். இணைய வழியில் தமிழ் கற்பிப்போருக்குத் தாராளமாகப் பொருளுதவி அளித்தல் வேண்டும். தூதரகங்களிலும் மத்திய அரசு நிறுவனங்களிலும் தமிழ் படிப்போருக்கு வேலை வாய்ப்பு அளித்தல் வேண்டும். சமற்கிருதத்தையும் இந்தியையும் மட்டும் உயர்த்திப்பிடிக்கும் தவறான போக்கைக் கைவிட்டு, உலக மக்களுக்குத் தாயான தமிழ்மொழியைக் கற்பிக்க எல்லா வகையிலும் செயலாற்ற வேண்டும்.

தேமதுரத்தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நனவாக்க இவை உதவும்.

ஆங்கிலத்தைக் கற்கையிலும்

அயல்மொழியைக் கற்கையிலும்

எந்த நாளும்

தீங்கனியைச் செந்தமிழைத்

தொன்னாட்டின் பொன்னேட்டை

உயிராய்க் கொள்வீர்!

 

என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் கட்டளையை எந்நாளும் மறக்காமல் பின்பற்றுவோம்!

தமிழ் கற்போம்! தமிழ் கற்பிப்போம்!

தமிழராய்த் தலைநிமிர்ந்து வாழ்வோம்!

தமிழன்னையை ஆட்சிப்பீடத்தில் ஏற்றுவோம்!

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png

News

Read Previous

புதுக்கவிதை முன்னோடிகள் தொடர் வரிசை

Read Next

மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *