பரமக்குடியில் நலம்காக்கும்ஸ்டாலின் மருத்துவ முகாம்

பரமக்குடியில் நலம்காக்கும்ஸ்டாலின் மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில்
நலம்காக்கும்ஸ்டாலின் மருத்துவ முகாமினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
இம்முகாமில் பொது மருத்துவம், ரத்தம், சர்க்கரை ,எலும்புமுறிவு ஸ்கேன், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக பார்க்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மருத்துவர் சுந்தராஜன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி , பரமக்குடி வடக்கு நகர கழக செயலாளர் ஜீவரத்தினம், நகர்மன்றத் துணைத் தலைவர் குணா, ஆயிர வைசிய சபைத் தலைவர் பாலுசாமி ஆயிர வைசிய சபை இணைத் தலைவர் ராசி என்போஸ் நகர்மன்ற உறுப்பினர் எஸ் ஆர் சதீஸ் குமார் அறங்காவலர் குழு உறுப்பினர் இளையராஜா
மாவட்ட சுகாதார அலுவலர் லட்சுமி நாராயணன் பரமக்குடி வட்டார மருத்துவ அலுவலர் சுகந்தி போஸ் மற்றும் கார்த்திக், ஜெயந்த், கிருபா , சுபஸ்ரீ, ராஜேஷ், நிவேநிதா, ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




