இராமநாதபுரம்
கீழக்கரை பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

கீழக்கரை பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இத்தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியில் உள்ள பசுமை படை சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்று விதைகள் வழங்கப்பட்டது மேலும் பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர். இந்நிகழ்வில் பெருந்தலைவர் காமராஜர் பற்றிய பாடல்களும் மாணவர்களால் பாடப்பட்டது.மேலும் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்கள் மத்தியில் கல்வியின் அவசியத்தை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




