இராமநாதபுரம்

காமராஜர் 123 வது பிறந்த நாள்

இராமநாதபுரம் சேதுபதி நகர், அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில், முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஆலம்,அரசு,அத்தி,வேம்பு,மகிழம், பழா,மா,கொய்யா,நெல்லி,பூவரசு, புன்னை,புங்கை ,கடம்பு,குதிரைப் புடுங்கன், நாவல், புளி ஆகிய சுமார் ஐம்பது மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி சங்கத்தின் தலைவர் பொறியாளர் Rtn மாரி,செயலாளர் Rtn அமீன் சாதிக், துணை ஆளுநர் Rtn Dr சோமசுந்தரம், IPP Rtn Er.அன்னபூர்ணா தேவி, Rtn வினோஜ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் திருஉத்திரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் மற்றும் அப்பள்ளி கபாடி குழு மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை பசுமை முதன்மையாளரும், பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளருமான சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button