கவிதைகள் (All)

அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல்

ஆலயத்தைக் காப்பாற்ற
ஆனைப் படைமீது கற்களை வீசிட
அபாபீல் பறவைகளை
அனுப்பி வைத்த அல்லாஹ்வே..!

பாலஸ்தீனத்தின் பாலகர்களும் அக்ஸா
ஆலயத்தைக் காப்பாற்ற தானே
இனவெறியன் இஸ்ரேலர் மீது
மன உறுதியுடன் கற்களை வீசியும்;
பன்னெடுங்காலமாய் பாதுகாப்பு போரில்
தன்னுயிர்,உறவு,உடைமைகள் இழ்ந்துவிட்டனரே………..!
இன்னும் ஏன் நீ இஸ்ரேலை அழிக்கவில்லை????????????

தீர்ப்பு நாளின் அதிபதியே..!
தீர்ப்பை இவ்வுலகில் தந்து விட்டாலும்
தீர்ந்து விடாது உனது தண்டனை இஸ்ரேலர் மீது
உன் மீது கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை தான்,
உன்மீது ஆதரவு வைக்கும் உரிமையில் கேட்கின்றோம்;

கதறும் பாலகர்களின் குரல் கேட்டு
பதறும் எங்கள் வேதனை அறியும் படைத்தோனே…….!
அப்பாவிகளைக் கொல்லும் அ(ந்த)ப் பாவிகளை அழித்து விடு;
எப்போதும் தலைதூக்காமல் இஸ்ரேலர்களை ஒழித்து விடு

-அலறும் பால்ஸ்தீனர்கள் மீது அனுதாபங்களுடன்,
கவியன்பன் கலாம், அதிராம்ப்ட்டினம்.

0097150-8351499
shaickkalam@yahoo.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button