இராமநாதபுரம்
சாயல்குடி பகுதியில் உள்ள மனிதம் GOP அறக்கட்டளைக்கு விருது

சாயல்குடி பகுதியில் உள்ள மனிதம் GOP அறக்கட்டளைக்கு விருது

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் கல்வி மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வரும் மனிதம் GOP அறக்கட்டளை சேவைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பசும் பொன் இரத்ததான அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறந்த மக்களுக்கான சமூக சேவை விருது மனிதம் GOP அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கிய பசும் பொன் பாசறை இரத்ததான அறக்கட்டளை நிறுவனர் கண்ணன் அவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்தார் மேலும் இந்த சேவை இறுதி வரை தொடரும் என்று மனிதம் GOP அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




