முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா – பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக மீலாது விழா மாபெரும் பொதுக்கூட்டம் ஹிம்மத்துல் இஸ்லாம் பெண்கள் நிஸ்வான் மஜ்லிஸில் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது.

தலைமை இமாம் மௌலவி அகமது பஷீர் சேட் ஆலிம் தலைமையில், காதர் முகைதீன் தலைவர் பெரிய பள்ளிவாசல் ஜமாத், காதர் நைனார் கனி, துணைத்தலைவர் பெரிய பள்ளிவாசல் ஜமாத், முஹம்மது இக்பால், தலைவர் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாத், மதுரை, MMKM.காதர் முகைதீன், முன்னாள் ஜமாத் தலைவர் பெரிய பள்ளிவாசல், காஜா நஜிமுதீன், கல்விக் குழு தலைவர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளிகள், ஜஹாங்கீர், தாளாளர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, MMKM.காஜா கமருதீன்,தாளாளர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி, பாசில் அமீன், தாளாளர் பள்ளிவாசல் நர்சரி & பிரைமரி பள்ளி, NKN அமீருல் ஹக், முன்னாள் தலைவர் ஹி.இ. வா.சங்கம், காஜா நிஜாமுதீன் குரைசி, தலைமை ஆசிரியர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, காதர்சா தலைமை ஆசிரியர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி, ஜபருல்லா கான் தலைவர் திடல் ஜும்மா பள்ளிவாசல், முகமது முஸ்தபா முஸ்தபா நகர் பள்ளிவாசல், ஆகியோர் முன்னிலையிலும்,
முஹம்மத் சிராஜுதீன் இமாம் திடல் பள்ளிவாசல் ஜமாத் அவர்கள் கிராஅத் ஓத, அகமது கபீர் செயலாளர், ஹி. இ.வா.சங்கம் அவர்கள் வரவேற்புரையாற்ற, சையது சுல்தான் அலி பாதுஷா, செயலாளர் கமுதி முதுகுளத்தூர் வட்டாரம் சபை, இமாம் ஜும்மா பள்ளிவாசல் தேரிருவேலி, மற்றும் சௌகத் அலி ஆலிம் இமாம் பெரிய பள்ளிவாசல் ஆகியோர் சிறப்புரையாற்ற, தேசிய நல்லாசிரியர் அப்துல் காதர் மற்றும் ஜாஹிர் உசேன் உதவி தலைமை ஆசிரியர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆகியோர், கடந்த 2024-2025 ம் ஆண்டு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற முஸ்லிம் மாணாக்கர்களுக்கு பரிசளிக்க, AY கார்மெண்ட்ஸ், முஹம்மது யூனுஸ் அவர்கள், ஏழை மார்க்க கல்யாணம் செய்யும் சிறுவர்களுக்கு ஆடை அன்பளிப்பு வழங்க,
முதுகுளத்தூர் நகரைச் சார்ந்த இந்த வருடத்தில் மருத்துவராக படிப்பிற்கு தேர்ச்சி பெற்ற மூன்று மாணாக்கர்களுக்கு ஹி. இ.வா. சங்கம் மற்றும் முதுகுளத்தூர் ஜமாத்துல் உலமா சபை சார்பாகவும், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
ஹி. இ.வா. சங்கத்தின் சார்பாக TNPSC குரூப் தேர்வுக்கு ஆசிரியர்களாக இருந்து வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், குர்ஆன் ஓதும் போட்டியில் பெரிய பள்ளிவாசல், முகைதீன் பள்ளிவாசல், திடல் பள்ளிவாசல், முஸ்தபா நகர் பள்ளிவாசலில், முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு, வெளிநாடு வாழ் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாத் (UMMJ) சார்பாக சிறப்பான பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், பரிசுகள் வழங்க முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மீலாது விழா சிறப்பாக நடைபெற பொறுப்பேற்ற ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் செயலாளர் அகமது கபீர், துணைத் தலைவர் செய்தது மீரா, துணை செயலாளர் முஷரப் அலி, பொருளாளர், சீனி முஹம்மது, ஆடிட்டர் அப்துல்லா அசன்கனி, கணக்கர் அகமது இப்ராஹிம், நிர்வாக குழு உறுப்பினர்கள், ஜியாவுதீன், அப்துல் மாலிக், சுல்தான் சம்சுதீன், முகமது ரியாஸ் அலி, அப்துல் வஹ்ஹாப், ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்து சிறப்பித்தனர்.
இறுதியாக ஹி. இ.வா. சங்கத் தலைவர் அப்துல் அஜீஸ், நன்றி உரை வாசிக்க நிகழ்ச்சி நிறைவு பெற்றது.











