இராமநாதபுரம்
5 கிலோ கஞ்சா பறிமுதல்

5 கிலோ கஞ்சா பறிமுதல்;\

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வளையபூக்குளம் கிராம ஆற்றுப்படுகையில் கஞ்சா விற்பதாக மண்டலமாணிக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மண்டல மாணிக்கம் போலீசார் அங்கு பார்த்தபோது மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி(25) என்ற வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரது வீட்டில் சோதனையிட்டதில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை மண்டலமாணிக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர்.




