இராமநாதபுரம்
இம்மானுவேல் சேகரனாரின் 68வது ஆண்டு நினைவு தினம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பண்ணவயலில் இம்மானுவேல் சேகரனாரின் 68வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கிராம மக்களும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினர். திருவாடானை போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.





