இராமநாதபுரம்

கீழக்கரை 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் 8 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் 8 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு 18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர்கள் க.கு ஜப்பார், கே.எஸ்.எம்.எஸ் இப்ராகிம் மற்றும் முஹம்மது முபாரக் அவர்கள் தலைமை வகித்தனர்.காதர் சாஹிப் முன்னிலை வகித்தார்.இப்பொதுக்குழு கூட்டத்தை அலி அஹமது கிராத் ஓதி துவக்கி வைத்தார்.மன்சூர் ஆலீம் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்திற்கு ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஒருமித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது,மேலும் இக்கூட்டத்தில் விருதுகளும் வழங்கப்பட்டது சமூக சேவையாளர் விருது காதர் சாஹிப்க்கு வழங்கப்பட்டது.சிறந்த சேவையாளர் விருது முஹம்மது சுஹைப் வழங்கப்பட்டது.கண்ணியமிகு காயிதே மில்லத் விருது. சீனி முஹம்மது வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்களும் வாசிக்கப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது,
ஊர் சுகாதாரம், மரம் நட்டு பராமரித்தல், போக்குவரத்து நெரிசலை சரி செய்தல், விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு சாதனையாளர் விருது மற்றும் 10,12_ஆம் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்குவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் குதுபுதீன் ராஜா நன்றி உரையாற்றினார் பொதுக்குழு கூட்டம் முடியில் அப்துல் ரவுஃப் ஆலிம் துஆ ஓதி இக்கூட்டத்தை நிறைவு செய்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button