விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர்,: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே , தாலுகா தலைவர் ராமநாதன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் கலையரசன், தாலுகா செயலாளர் முருகேசன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் அழகர் வரவேற்றார். முதுகுளத்தூர் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்.

ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவு வேண்டும். வறட்சி குறித்து கணக்கெடுக்க உத்தரவிடுவதுடன், அமைச்சர், அதிகாரிகள் நேரில் பார்வையிடவும், பயிர்க் கடனை தள்ளுபடி செய்வது, வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வலியுறுத்தினர்.

விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் முருகன், தொழிற்சங்க குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், சண்முகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.கடலாடி: கடலாடியில், கடலாடி தாலுகா விவசாய சங்க செயலாளர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். தலைவர் கருப்பையா, துணை தலைவர் குருசாமி, பொருளாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் குருவேல், மாவட்ட விவசாய சங்க செயலாளர் நாகநாதன், விவசாய சங்க மாவட்ட முன்னாள் தலைவர் மயில்வாகணன் பேசினர். ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.ஆப்பனூர் பிர்க்காவிற்கு முழுமையாக காப்பீடு தொகை வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

News

Read Previous

கிடாத்திருக்கைக்கு அரசு பஸ் “கட்’

Read Next

ஜித்தா மாநகரில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *