விபத்தினை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் .டிஎஸ்பி வலியுறுத்தல்

Vinkmag ad

விபத்தினை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் .டிஎஸ்பி வலியுறுத்தல்

முதுகுளத்தூர்

விபத்தினை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என டிஎஸ்பி ராஜேஸ் வலியுறுத்தினார்.
முதுகுளத்தூர் பகுதியில் 4 பேர் ஹெல்மெட் அணியாததால் இறந்துள்ளனர் . டுவிலர் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் . பெண்கள் மற்றும் ஆண்கள் 2 பேர் சென்றாலும் 2 பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் .
முதுகுளத்தூர் சப்-டிவிசனில் விபத்து ஏற்படக்கூடாது .

மேலும் முதுகுளத்தூரில் அனைத்து கேமராக்களும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் . பழுதடைந்துள்ள சில கேமராக்கள் பழுது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன .
சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் . சாலையோர கடைகள் வாரச்சந்தை வளாகத்தில் அமைக்க பேருராட்சி முலம் நடவடிக்கை எடுக்கப்படும். போலிசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடவும் பொது மக்கள் சட்டவிரோத செயல்பாடுகள் நடக்கும் போது எந்த நேரமும் என்னிடம் தொடர்பு கொள்ளலாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார் .
போக்கு வரத்து விதிகளை பின்பற்ற விபத்தில்லா பகுதியாக உருவாக வேண்டும் எனவும் டேங்கர்லாரிகள் மற்றும் மினி வேன்கள் நகர்ப்பகுதிக்குள் வேகத்தை குறைத்து இயக்க வேண்டும் என முதுகுளத்தூர் டிஎஸ்பி ராஜேஸ் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

News

Read Previous

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

Read Next

சவால்களும் எமது பணிகளும்

Leave a Reply

Your email address will not be published.