வட்டார அளவிலான ஓவியம், கட்டுரைப் போட்டி

Vinkmag ad

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஓவியம், சுவரொட்டி வடிவமைத்தல், வாசகங்கள், கட்டுரைப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன.

போட்டியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மு. தினகரராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர். ஓவியப் போட்டியில் காக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஜி. முகேஷ் கண்ணன் முதல் பரிசும், கட்டுரைப் போட்டியில் தேரிருவேலி சாகிப் ராவுத்தர் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி எஸ். சௌமியா முதல் பரிசும், சுவரொட்டி போட்டியில் உலையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம். திருநாவுக்கரசு முதல் பரிசும், வாசகங்கள் போட்டியில் தேரிருவேலி சாகிப் ராவுத்தர் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஜி. புவனேஸ்வரி முதல் பரிசும் பெற்றனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

News

Read Previous

பேசாமொழி 20வது இதழ்

Read Next

ஐந்து கிராம் உப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *