முதுகுளத்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை

Vinkmag ad

முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பரமக்குடி கல்வி மாவட்டம் உலக திறனாய்வாளர்களை தேர்வு செய்யும் விளையாட்டு போட்டி எஸ்.வி.என். அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக். பள்ளியில் 6 ஆம்வகுப்பு பயிலும் மாணவர்கள் எம். தென்னரசு 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், உயரம் தாண்டுதலில் முதலிடமும் பெற்றார். தர்மர் என்ற மாணவர் உயரம் தண்டுதலில் இரண்டாமிடமும், 200 மீ ஓட்டப் பந்தயத்தில் இரண்டமிடமும் பெற்றார்.

200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முகேஷ் குமார் மூன்றாம் இடமும் எஸ். எழிலரசி இரண்டாமிடமும் பெற்றனர்.

போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியை ஏ. சித்ரா, ஆசிரியைகள் டி. புஷ்பராணி, கே. ரேகா ஆகியோர் பாராட்டினர்.

News

Read Previous

உழவர்களின் உழைப்பை உளமார வாழ்த்துவோமாக!

Read Next

புதுவாழ்வு பிறந்திடட்டும் !

Leave a Reply

Your email address will not be published.