முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

Vinkmag ad

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் கிராமங்களுக்கு 15 நாளாக குடிநீர் நிறுத்தம் கால்நடைகளும் தவிப்பு

முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் கால்நடைகளுக்கு கழிவுநீர்கூட கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூர் பகுதியில் ஏனாதி, கீழச்சாகுளம், மேலச்சாகுளம், பூங்குளம், ஒருவானேந்தல், தேவர்குறிச்சி, பொதிகுளம் உள்பட 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பருவமழை பொய்த்ததால் கண்மாய், குளங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் என அனைத்தும் வறண்டுவிட்டன. இப்பகுதியில் தற்போது வரலாறு காணாத வகையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கிராமங்களுக்கு ஒரே நீராதாரமாக காவிரி குடிநீர் மட்டுமே இருந்து வந்தது.

அதுவும் தற்போது கடந்த 15 நாட்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  ஆடு, மாடு, கோழிகளுக்கு கழிவுநீர்கூட கிடைக்கவில்லை. வனப் பகுதியில் சுற்றி திரியும் விலங்குகள், மயில்கள் கிராமப்புறங்களை நோக்கி வருகின்றன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உப்பு நீரை குடிநீராக மாற்றும் `மெட்ரோ வாட்டர் பிளாண்ட்’ அமைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குடிநீருக்கு தட்டுப்பாடு நீங்கும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஒருவானேந்தலைச் சேர்ந்த இளங்கோவன் கூறுகையில், “ஒரு குடம் குடிநீர் ரூ.10க்குகூட கிடைப்பது பெரும் பாடாக உள்ளது. சாலையோரங்களில் கசியும் காவிரி நீரை பல மணி நேரம் வெயிலில் காத்திருந்து அள்ளிச்சென்று குடிக்கும் அவல நிலையில்தான் உள்ளோம்” என்றார்.

News

Read Previous

தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு

Read Next

அசோகமித்திரன் : எளிமையின் பெருங்கலைஞன்

Leave a Reply

Your email address will not be published.