முதுகுளத்தூர், கமுதியில்அதிமுகவினர் உண்ணாவிரதம்

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதத்தில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எம். முருகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஆர். தர்மர், மாவட்ட ஒன்றியக் குழு தலைவர் எம். சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது கடலாடி ஒன்றியச் செயலர் முனியசாமி பாண்டியன், சாயல்குடி ஒன்றியச் செயலர் அந்தோனிராஜ், ஊராட்சிக் குழுத் தலைவர் சுதந்திரா காந்தி இருளாண்டி, முன்னிலை வகித்தார். மாவட்ட இளம் பெண்கள் பாசறை பொருளாளர் பி. பன்னீர் செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ். மலைக்கண்ணன், கவுன்சிலர்கள் எம். முத்துமாரி, எம். உடை சிவக்குமார், தூரி மாடசாமி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் கே. அர்ச்சுனன், அண்ணா தொழிற்சங்கத் தலைவர் முத்துவேல், செயலர் என். ரவிச்சந்திரன், பொருளாளர் அப்துல் லத்தீப், ஒன்றிய மீனவரணி செயலர் பா. முருகேசன், மாநில விவசாய அணி இணைச் செயலர் வி. கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் எஸ். சுந்தரமூர்த்தி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கமுதியில்: சொத்து குவிப்பு வழக்கில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததைக் கண்டித்து, கமுதியில், வெள்ளிக்கிழமை அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

பேருந்து நிலையம் முன் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு ஒன்றியச் செயலர் ஏ. மீனாட்சிசுந்தரம் தலைமையும், ஒன்றிய அவைத் தலைவர் க. சிங்கம் என்ற முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், முதுகுளத்தூர் தொகுதி அமைப்பாளர் பெருநாழி எஸ்.பி. காளிமுத்து, ஊராட்சி ஒன்றியத் தலைவர், வழக்குரைஞர் த. பாலு, மாவட்ட மருத்துவர் அணி துணைச் செயலர் எம். கபிலன், அபிராமம் பேரூராட்சித் தலைவர் எம். குமணன், மாவட்ட ஊராட்சிகள் கவுன்சில் தலைவர்கள் வழக்குரைஞர் எஸ். முத்துராமலிங்கம், கரிசல்புளி முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர செயலர்கள் கே.பி.எம். கந்து இக்பால் (கமுதி), சித்ரமால் (அபிராமம்) ஆகியோர் வரவேற்றனர். உண்ணாவிரதத்தில் மு. முருகன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர், வழக்குரைஞர் எம். சுந்தரபாண்டியன், தலைமைக் கழக பேச்சாளர்கள் பரமக்குடி ஜமால், கடலாடி பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.

News

Read Previous

முதுகுளத்தூரில் காந்தி ஜயந்தி விழா

Read Next

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

Leave a Reply

Your email address will not be published.