முதுகுளத்தூரில் 558 பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

Vinkmag ad

முதுகுளத்தூர் ஸ்ரீவடக்குவாசல் செல்வி அம்மன் மன்றத்தின் சார்பில், ஞாயிற்றுக்கிழமை ஆதிபராசக்தி பக்தர்கள் 558 பேர் கஞ்சி கலயத்துடன் ஊர்வலமாகச் சென்றனர்.

  ஆடி மாதத்தை முன்னிட்டு, முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலில், செல்வி அம்மன் மன்றத்தின் சார்பாக 558 பக்தர்கள் கலயம் எடுத்தனர். இவர்கள், ஆதிபராசக்தி கோயிலில் இருந்து கஞ்சி கலயத்தை சுமந்து, சுப்பிரமணியர் கோயில், விநாயகர் கோயில் வழியாக பேருந்து நிலையம், அய்யனார் கோயில், செல்வி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளின் வழியே ஊர்வமாக வந்து மீண்டும் ஆதிபராசக்தி கோயிலை அடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

News

Read Previous

அனுமதியின்றி கபடி போட்டி: 5 பேர் கைது

Read Next

நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவனுக்கு எழுதிய கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *