முதுகுளத்தூரில் மெடிக்கல், பலசரக்கு கடைகளுக்கு சீல்

Vinkmag ad

mமுதுகுளத்தூரில் மெடிக்கல், பலசரக்கு கடைகளுக்கு சீல்

பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசின் விதிமுறையின்படி 3 மீட்டர் இடைவெளி இல்லாமல், பொதுமக்களுக்கு வியாபாரம் செய்த 2 மளிகை கடைகளுக்கும், முகமூடி (மாங்க்) அதிக விலைக்கு விற்பனை செய்த பிரபல மருந்தகமும் வட்டாச்சியர் முருகேசன், துணை கண்காணிப்பாளர் ராஜேஸ் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னிலையில் செயல் அலுவலர் மாலதி கடையினை பூட்டி சீல் வைத்தார்.

இதுகுறித்து செயல் அலுவலர் மாலதி கூறும்போது.

சம்பந்தப்பட்ட பலசரக்கு கடைகளுக்கும், மருந்தகத்திற்கும் பல முறை அரசின் விதிமுறையினை கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள் என பேரூராட்சி ஊழியர்கள் மூலம் எச்சரித்தும், அரசின் விதிமுறையினை மதிக்காமல், பொதுமக்களை கூட்டமாக நிற்கவைத்து வியாபாரம் செய்ததினால் இன்று காவல்துறையினர், வட்டாச்சியர், சுகாதாரத்துறையினர் முன்னிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது . மேலும் பஸ் நிலையத்தில் காய்கறி கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்வோர், ஏற்கனவே பேரூராட்சியின் மூலம் உரிமம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும், புதிதாக யாரும் கடைகள் போட்டு விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

News

Read Previous

தனிமை சுகமா? சாபமா?

Read Next

கிருமி நாசினி மருந்து தெளித்த அமைச்சர் நிலோபர் கபில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *