முதுகுளத்தூரில் த.மு.மு.க.,- ம.ம.க., நிர்வாகிகள் கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில், த.மு.மு.க.,- ம.ம.க., மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட தலைவர் சம்சுதீன் சேட் தலைமையிலும், ம.ம.க., மாவட்ட செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலையிலும் நடந்தது.

த.மு.மு.க., மாவட்ட செயலாளர் பாஹிர் அலி வரவேற்றார். மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளராக சிக்கந்தர், நகர செயலாளராக அப்துல் அஜிஸ், த.மு.மு.க., மாணவர் அணி செயலாளராக அப்தாஹிர் போட்டியின்றி தேர்வு செய்யபட்டனர். அறிவிக்கபடாத மின்வெட்டை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றபட்டது. மாவட்ட தொண்டரணி செயலாளர் இபுராஹிம்ஷா, மருத்துவரணி செயலாளர் ஷர்மிஷேக், முதுகுளத்தூர் நகர தலைவர் ஜியாவுதீன், ஒன்றிய செயலாளர் அமிருல்ஹக், ஒன்றிய தலைவர் வாவாராவுத்தர், சல்மான் ரபீக் பங்கேற்றனர். ம.ம.க., நகர செயலாளர் முகம்மது இக்பால் நன்றி கூறினார்.

 

 

News

Read Previous

2014-ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்

Read Next

பூக்குளத்தில் அம்மா திட்ட முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *