முதுகுளத்தூரில் ஜமாபந்தி துவக்கம்

Vinkmag ad

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய கணக்குகள் ஆய்வுப்பணி (ஜமாபந்தி) புதன்கிழமை துவங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது,

இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், விதவை உதவித்தொகை போன்றவை பெறப்பட்டன. ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. விஸ்வநாதன் தலைமையில் துவங்கியது. தாசில்தார் ரவீந்திரநாதன், மண்டல துணை வட்டாட்சியர்கள் சதீஸ்குமார், இந்திரா, வருவாய் ஆய்வாளர்கள் முருகன், காசிநாதத்துரை, பிரேமா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

முதுகுளத்தூர் வடக்கு வருவாய்ப் பிர்க்காவில் மேலமுதுகுளத்தூர், கீழமுதுகுளத்தூர், புல்வாய்க்குளம், நல்லூர், கீரனூர், மணலூர், ஆனைசேரி, முதுகுளத்தூர் தெற்கு வருவாய் பிர்க்காவில் சித்திரங்குடி, எஸ்.பி. கோட்டை, ஏனாதி, கண்டிலான், இளஞ்செம்பூர், கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, சேந்தனேரி, கீழத்தூவல் வருவாய் பிர்க்காவில் மேலத்தூவல், விளங்குளத்தூர், வெங்கலகுறிச்சி, சுவாத்தான், செல்லூர், திருவரங்கம், கொளுந்துறை உள்பட 23 வருவாய் கிராமங்களுக்குரிய வருவாய்த்தீர்வாய கணக்குகளை மாவட்ட வருவாய் அலுவலர் சோ. விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 25 பட்டா மாறுதல் மற்றும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன,

News

Read Previous

துபையில் வீடு மற்றும் அலுவலகம் வாடகைக்கு

Read Next

மண்டல தடகள போட்டி முதுகுளத்தூர் ஐடிஐ மாணவர்கள் வெற்றி

Leave a Reply

Your email address will not be published.