பயிர் இன்சூரன்ஸ் பதிவு தாமதம்:வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Vinkmag ad

முதுகுளத்தூரில் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்வதை கிராம நிர்வாக அதிகாரிகள் தாமதம் செய்வதாகக் கூறி, வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சாக்குளம், ஏனாதி, எஸ்.பி.கோட்டை, எட்டிசேரி, மேலச்சாக்குளம் ஆகிய கிராம மக்கள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் அலுவலக பணியில் இல்லாமல் இருந்ததால், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்ய முடியாமல் கால தாமதம் ஆகிவிட்டதாலும் சனிக்கிழமை 15 -ந்தேதி பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்ய கடைசி நாள் என அறிவிப்பு உள்ளது.

ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் இல்லாமல் கால தாமதம் செய்வதால் எங்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் பதிய முடியாமல் போய்விடும் என வட்டாட்சியர் எஸ். ராமமூர்த்தியிடம் கிராம பொது மக்கள் புகார் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில மணி நேரத்திற்குப் பிறகு சார்பு ஆய்வாளர் ஐôன்ஸிராணி மற்றும் போலீஸார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கிராம பொது மக்கள் கலைந்து சென்றனர்.

News

Read Previous

மலேரியாவின் கதை

Read Next

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்

Leave a Reply

Your email address will not be published.