திமுக பொதுக் கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 91ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  நகர் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சுப. தங்கவேலன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் த. முத்துராமலிங்கம், மாவட்ட துணைச் செயலர் கே. கருப்பையா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஷாஜஹான், மாவட்ட பிரதிநிதி ஏ.கே. ராமு, ஒன்றிய அவைத் தலைவர் எஸ். பூபதி மணி, முன்னாள் மாவட்ட துணைச் செயலர் ஆர். செல்லமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் கே. முனியசாமி வரவேற்றார். கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் சைதை சாதிக், அ.வே. அரவரசன், கடலாடி முன்னாள் சேர்மன் ராஜசேகர், சாம்பக்குளம் ஊராட்சித் தலைவர் சண்முகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் எம். ஆறுமுகம் நன்றி கூறினார்.

News

Read Previous

ஜுலை 18, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Read Next

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு !

Leave a Reply

Your email address will not be published.