கீழத்தூவலில் துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூரில் ஒன்றிய கவுன்சிலர் கூட் டம்  தலைவர் சுதந்திராகாந்தி தலைமையில் நடந்தது. எம்எல்ஏ முருகன், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சிவக்குமார்(மேலக்கன்னிசேரி) – விளக்கனேந்தல் சுடுகாட்டிற்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யூனியன் அலுவலக கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குருநாதன் (ஆணை யாளர்) – பராமரிக்க ஒப்பந்தகாரர்கள் முன்வரவில்லை. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சரஸ்வதி (சாம்பக் குளம்) – கீழத்தூவல் பகு தியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. போதிய மின் அழுத்தம் இல்லாததால் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபால்(திருவரங்கம்) – திருவரங்கம் இந்திரா காலனியில் உள்ள 7 மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. ஒடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுதலை, செங்கப்படை, வாத்தியனேந்தல், பனையடியேந்தல் ஆகிய கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக சப்ளை செய்யப்படுவதில்லை.

தனசேகரன் (பெரிய இலை) – பெரியஇலை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் ஆழ்குழாய்கள் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளன. முறையாக தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது.

வேலுச்சாமி (தேருரிவேலி) – பூசேரி தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது. ஒன்றிய பொறியாளர்கள் அருண்பிரசாத், மயிலை முத்து உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News

Read Previous

நினைவாற்றலை பெருக்கும் மாதுளை

Read Next

தானியங்கள் – மின்னூல் – ஏற்காடு இளங்கோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *