கிறிஸ்தவ திருச்சபை சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை

Vinkmag ad

முதுகுளத்தூரில் டி.இ.எல்.சி. கிறிஸ்தவ திருச்சபைக்கு சொந்தமான சொத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து விற்றதாக, பங்குத்தந்தை உள்ளிட்ட 4 பேர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரிóல் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் டி.இ.எல்.சி, கிறிஸ்தவ அமைப்புக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

  இச்சொத்துக்களுக்கு முதுகுளத்தூர் அருகே பேரையூர் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மகன் மந்திரி ராஜ்குமார், பரமக்குடி ஜெயராஜ் மகனான பங்குத்தந்தை சாம்ஸ்டீபன் ஆகியோர் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளனர். இந்த ஆவணங்களைக்  கொண்டு மேற்கண்ட சொத்துக்களை திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகரை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் குட்டி என்ற பால்பிரதீப் குமார் ஆகியோருக்கு விற்று விட்டதாக தெரிய வந்துள்ளது.

  இது குறித்து திருச்சி கீழப்புதூர் தரங்கைவாகம் டி.இ.எல்.சி. திருச்சபைத் தலைவரும், பங்குத்தந்தையுமான ஹெச்.ஏ.மார்ட்டின் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் மனுக் கொடுத்தார்.   இப்புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்டுள்ள மந்திரி ராஜ்குமார், பங்குத்தந்தை சாம்ஸ்டீபன் உள்ளிட்ட 4 பேர் மீது இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

News

Read Previous

நாகூர் HONEYபா!

Read Next

சாய்வு”நாற்காலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *