ஃபேஸ்புக் சர்ச்சை : முஸ்லிம் முதுகுளத்தூர்

Vinkmag ad

ஃபேஸ்புக்கில் முஸ்லிம் முதுகுளத்தூர் என்ற பெயரில் முதுவை ஹிதாயத்தின் புகைப்படத்துடன் செயல்பட்டு வருகிறது.

முதுவை ஹிதாயத்தின் புகைப்படத்துடன் செயல்பட்டு வருவதால் இந்த போட்டோவை பார்த்து பலர் நண்பர்களாக இணைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதுகுளத்தூர் சகோதரர் ஃபாரூக் ஹுசைன் குறித்தும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து  அந்த சகோதரர் என்னிடன் தொடர்பு கொண்ட காரணத்தால் விளக்கமளிக்கப்பட்டது.

முதுகுளத்தூர் தமுமுகவை ஃபேஸ்புக்கை செயல்படுத்தி வருபவருபவர் அதிமேதாவித்தனமாக அறிவுரை வழங்கியுள்ளார்.

யார் இந்த பக்கத்தை செயல்படுத்தி வருகிறார்கள் என்பது தெரியாமலேயே பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் இதன் மூலம் எவ்வித கருத்து துவேஷங்களும் வந்துவிடக்கூடாது எனக் கருதி முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்தை செயல்படுத்தி வரும் முதுவை ஹிதாயத் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

முதுகுளத்தூரைப் பொருத்தவரை இனத்திற்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டு அது ஒரே முதுகுளத்தூர் தான். இதில் முஸ்லிம் முதுகுளத்தூர் என்றோ அல்லது வேறு எந்த ஒரு சமூகத்திற்கும் சொந்தமானதல்ல. எனவே இதனை கருத்தில் சமூக நல்லிணக்கத்தில் ஆர்வமுடைய அனைவரும் இதுபோன்ற போலிகளை அடையாளங்கண்டு ஒதுக்கிட வேண்டும்.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தை நடத்தி வரும் நபர் முதுவை ஹிதாயத்தின் புகைப்படத்தை நீக்காத பட்சத்தில் விரைவில் காவல்துறை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

 

News

Read Previous

கலிமா முதல் ஹஜ் வரை

Read Next

டமில் to தமில் to தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *