கலிமா முதல் ஹஜ் வரை

Vinkmag ad

 

ஹாஜி எம்.ஏ. அயூப்கான், சென்னை

அழகான படைப்பாம் ஆதமின் மக்கள்

பகுத்தறிவை பகுத்து உணரும் பொருட்டு

ஓர் இறை ஓர்மறை என உலகில்

மனிதசமுதாயம் கூடி வாழ ஒரு கலிமா

 

அனைத்து வஸ்துவையும் நமக்காகவே படைத்தும்

நம்மைக் காத்து கரை சேர்க்கும் இறைவனுக்கு

நன்றிக் கடனாக சிரம் தாழ்த்தி

சுவனம் செல்ல செய்யும் தொழுகை

 

மூன்றூற்று முப்பது வேளை உ(ரு)ண்ட

உ(கு)டல் ஓய்வெடுத்து மீண்டும் உழைத்திடவே

ஏழைக்கும் எசமானுக்கும் பசி பொதுவானதே

என்றுணர ஒருமாதம் பகல் முழுக்க நோன்பு

 

காரில போகும் காசுக்காரர்

மாடி வீட்டு யோகக்காரர்

வறுமையில் வாடி நிற்கும் ஏழைக்கு

தோள் கொடுத்துத் தூக்கிவிட ஒரு சகாத்

 

எண்ணூறு மொழியாறும் எண்ணாறு நிறத்தாரும்

ஒரேமொழியில் ஓரணியில் தோள் உயர்த்தி

உலகே வியந்திட ஒன்றுபட்டு வணங்கி

இறுதிக் கடமையை உறுதி செய்யும் ஹஜ்ஜு

இவைதானே ஈமானின் அசையா சொத்து

 

நன்றி :

மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர்  2011

News

Read Previous

உறவுக்கு கைக்கொடுப்போம் !

Read Next

ஃபேஸ்புக் சர்ச்சை : முஸ்லிம் முதுகுளத்தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *