ரஷ்யாவில் டாக்டர் அமீர்ஜஹான்

Vinkmag ad

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயளாலரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான டாக்டர் A. அமீர்ஜஹான் ரஷ்ய நாட்டிற்க்கு 18.09.2013 முதல் 27.09.2013 சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

சுற்றுப்பயணத்தின் போது  ரஷ்ய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வணிக வளர்ச்சி சம்பந்தபட்ட ரஷ்ய நாட்டினுடைய துணைத் தலைவர் மாண்புமிகு விக்டர் தீவ் ((VIKTOR DEEV)) அவர்களைச் சந்தித்தார் மற்றும் ரஷ்ய நாட்டின் தொழிலதிபர்களுடனும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

விரைவில்  சென்னையில் கிழக்கு கடற்க்கறைச் சாலையில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 200 கோடி முதலீட்டில் இந்தோ – ரஷ்ய கூட்டமைப்பின் முதற்க்கட்ட முயற்ச்சியாக பொருளாதார மற்றும் ஏற்றுமதி வளாகம் விரைவில் உருவாக்குவதற்க்காக இந்த முதற்க் கட்ட பேச்சு வார்த்தை நடத்தி முடித்துள்ளார்.

இந்திய – ரஷ்ய நாடுகளின் நட்புறவிற்க்கும் இரு நாடுகளுக்கிடையில் கல்வி, கலாச்சார பரிவர்த்தனைகள் மற்றும் வணிகம், ஏற்றுமதி துறைகளின் வளர்ச்சிகளை மேம்படுத்த உதவும் என்று தமது உரையாடலில்  வலியுருத்திப் பேசினார்.

ரஷ்ய பாராளுமன்ற வளாகத்தில் நடந்த கலந்துரையாடலில் அவர்கள் அளித்த வரவேற்ப்பு மிகவும் மகிழ்ச்சியாக நடந்ததாக டாக்டர் A. அமீர்ஜஹான் தெரிவித்தார். உடன் அகில இந்திய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்க தலைவர் டாக்டர் நஜீரூல்அமீன் கலந்து கொண்டார்.

எம் ALFEREV NV  துணை தலைவர் பொருளாதார அபிவிருத்தி ரஷ்யா
டாக்டர் A. அமீர்ஜஹான் மற்றும் டாக்டர் A. நஜீரூல்அமீன்

டாக்டர் A. அமீர்ஜஹான் மற்றும் டாக்டர் நஜீரூல்அமீன் மற்றும்
ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள்

 

டாக்டர் A. அமீர்ஜஹான் மற்றும் டாக்டர் நஜீரூல்அமீன்
ரஷ்ய மருத்துவமனை டாக்டர்கள்

 

ரஷ்யாவின் தென்னிந்திய தூதரக அதிகாரி உயர்திரு. நிகோலே லிஸ்தோபதோவ், பேராசிரியர் நமென்ஸ்கயா ஸ்டோயனா வாசிலிவ்னா
டாக்டர் அமீர்ஜஹான் மற்றும் இந்திய மாணவர்கள்,

News

Read Previous

குடிநீர் குடம் தள்ளுவண்டிகளுக்கு “மவுசு’

Read Next

கட்டி முஹம்மது தாயார் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *