ஆண்டி செப்டிக் பிறந்த கதை

Vinkmag ad

பதிமூணு வயது சிறுமிக்கு

பாடம் சொல்லிக் கொடுக்க சென்றிருந்தேன்.

அவள் முட்டியில் சரியான சிராய்ப்பு.

காய்ந்திருந்தது.

அவள் அம்மாவிடம் அடிப்படை கேள்வி கேட்டேன்.

“டெட்டால் போட்டீங்களா”

“ஒரு பச்சிலை சாற பிழிஞ்சி விட்டேன்” என்றார்.

ஆச்சரியமாக இருந்தது. டெட்டால் மேல் அவருக்கு அவ்வளவு வெறுப்பு இருக்கிறது. காரணம் நம்ம இயற்கை வழி ஆர்வலர்களின் பிரச்சாரம்தான்.

டெட்டாலில் 5% Chloroxylenol இருக்கிறது.

Chloroxylenol என்பது Gram-positive bacteria மேல் நன்றாக செயலாற்றி அழிக்கவல்லது.

Clostridium என்னும் பேக்டீரியா இது போன்ற சிராய்ப்பில் வழியே மனிதனை அதிகம் துன்புறுத்தும்.

அந்த Clostridium பேக்டீரியா ஒரு Gram-positive bacteria .

அப்படியானால் டெட்டாலில் உள்ள Chloroxylenol அந்த Clostridium வை எளிதில் அழிக்கும்.

மேலும் டெட்டால் முழுக்க Chloroxylenol இல்லை. அது வெறும் 5 சதவிகிதம் மட்டுமே. மீதம் ஆல்கஹால் (?) மாதிரி ஒரு தொடர்பு திரவம்தான்.

உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இன்றே கீழே உள்ள ஜோசப் லிஸ்டர் கதையைச் சொல்லுங்கள்.

முக்கியமாக இந்தக் கதையை பாடத்திட்டத்தில் சேருங்கள்.

படத்துல பாக்குறது

ஜோசப் லிஸ்டர் கிருமி நாசினியை அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தும் காட்சி…

இங்கிலாந்த சேர்ந்த

ஜோசப் லிஸ்டர்ங்கிற மருத்துவர் அவர் கிட்ட முழங்கால் முறிவு சிகிச்சைக்காக வந்த கிரீன்லீஸ்ங்கிற பதினோரு வயசு பையனுக்கு கொடுத்த ட்ரீட்மெண்ட் பத்தி நீங்க எல்லாரும் தெரிஞ்சக்கனும்.

1860 கள்ல ஒருத்தருக்கு அறுவை சிகிச்சை நடந்தா அவரு பிழைக்கிற சான்ஸ் பாதிக்கும் கீழேதான்.

ஏன்னா சிகிச்சைனால ஏற்படுற காயங்கள் ஏதோ காரணத்தால அழுகி போய் பாதிக்கப்பட்டவங்க இல்லாம போயிர்றாங்க.

இது ஜோசப் லிஸ்டர ரொம்ப யோசிக்க வெச்சது. லூயிஸ் பாஸ்டர் அதுக்கு முன்னாடி பால் போன்ற பொருட்கள கொதிக்க வெச்சிட்டா அது கெட்டு போகாதுன்னு கண்டுபிடிக்கிறாரு.

ஆனா பாலக் கொதிக்க வைக்கிறது மாதிரி மனுசனோட காயம் பட்ட உறுப்ப கொதிக்க வைக்க முடியாதே.

ஜோசப் லிஸ்டர் யோசிக்கிறாரு. அவரு காலத்துல அடிப்பட்ட இடத்துல காயத்துல Coal Tar நிலக்கரில இருந்து எடுக்கிற தார் மாதிரி இருக்கிற ஒண்ண பூசுற பழக்கம் இருந்திச்சி.

லிஸ்டர் அந்த Coal Tar ல இருந்து எடுக்கிற கார்பாலிக் ஆசிட் எடுத்துட்டு வர்றாரு. அந்த பையன் கிரீன்லீஸ்ங்கிற முழங்கால்ல காயம் பட்ட இடத்துல சுத்தமான வெள்ளைத் துண்டி வெச்சி அதுல கார்பாலிக் ஆசிட்ட அதுல ஊத்தி விடுறாரு..

ஒருவாரம் கழிச்சி பாக்குறாரு. என்ன ஆச்சரியம் காயம் அழுக எல்லாம் செய்யல. அது ஆறத் தொடங்குது. அடுத்த ஆறு வாரத்துல காயம் நல்லா ஆறிப் போய் பையன் நடக்க ஆரம்பிச்சான்”

அதுகப்புறம் லிஸ்டர் பத்து ஆப்பிரேசன் செயறாரு. அதுல ஒரே ஒரு உயிரழப்புதான், அதுவும் வேற காரணத்தாலதான். மீதம் ஒன்பது பேரும் கார்பாலிக் ஆசிட் ஊற்றப்பட்டதால பிழைக்கிறாங்க.

அதே சமயம் ராபர் ஹூக் அவர் கண்டுபிடிச்ச மைக்கிரோஸ்கோப் வெச்சி, ஒரு செல் (cell) கண்டுபிடிக்கிறார்.நுண்ணுயிர்கள் பத்தி சொல்றாரு.

அப்படின்னா அந்த நுண்ணுயிர்கள்தான் காயம் அழுகுறதுக்கு காரணம், அத இந்த கார்பாலிக் ஆசிட் அழிக்குதுன்னு உலகத்தோட முதல் Anti septic கண்டுபிடிக்கிறார்.

ஆப்பிரேசன் நடந்தாதான் கார்பாலிக் ஆசிட காயத்துக்கு மேல ஊத்தனும்னு இல்ல. ஆப்பிரேசன் தியேட்டர்ல, நோயாளிகள் படுக்கை சுற்றி எல்லம் ஊற்றலாம். அது கிருமியை ஆழிக்கும்னு லிஸ்டர் கண்டுபிடிக்கிறாரு.

லிஸ்டரோட ஆண்டி செப்டிக் பாதுகாப்பு சிகிச்சை வகை எல்லா இடமும் பரவுது.

அதுவரைக்கும் 35 ஆப்பிரேசன்ல 16 பேர் இல்லாம போன ஒரு ஆஸ்பித்திரில, அது 40 க்கு 6 பேர்தான்னு குறையுது. இதத்தான் முதல் பத்தியில பின்னம்னு சொல்லி இருந்தேன்.

ஆண்டி செப்டிக், உயிரிழப்ப 45 % இருந்து 15 % க்கும் கீழா குறைக்குது.

ஜோசப் லிஸ்டரோட இந்த ஆண்டி செப்டி உபயோகிக்கும் முறை அவருக்கு வித்தியாசமா பணம் கொடுக்குது.

1871 ஆம் ஆண்டுல விக்டோரியா மகாராணிக்கு ஒரு பிரச்சனை. அவர் இடது அக்குள்ல ஒரு கட்டி வந்து பெரிய வேதனையைக் கொடுக்குது.

அத எடுக்கவும் பயம். அந்த காயம் அழுகிப் போய் உயிர் போயிருமோன்னு பயமா இருக்கு.

அப்போ ஜோசப் லிஸ்டர் தன் ஆண்டி பயாட்டிக் பத்தி சொல்லி அந்த கட்டிய வெட்டி எடுக்கிறாரு.

விக்டோரியா மகராணி ரொம்ப மகிழ்ச்சியாகி ஜோசப் லிஸ்டருக்கு நிறைய பணமும் பொருளும் கொடுக்குறாங்க.

இப்படியாக தன் கண்டுபிடிப்பால ஜோசப் லிஸ்டர் பல மக்கள காப்பாத்தி இருக்கிறாரு

இதுதாங்க ஆண்டி செப்டிக் பிறந்த கதை.

News

Read Previous

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வாலிபர் அடித்துக்கொலையா?? உறவினர்கள் மறியல்.

Read Next

டெலிலைப் இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *