வாழைத்தண்டின் பயன் !

Vinkmag ad

vaalai

  வாழைத்தண்டுச் சாறு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்முள் பலருக்குத் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாத பல மகத்துவங்களைக் கொண்டிருக்கிறது வாழைத்தண்டு. பொதுவாக நாம் வாழைத்தண்டைப் பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வழக்கம். சிறுநீரகக் கற்களைக் கரைக்க வாழைத் தண்டு சாறெடுத்து அருந்துவார்கள். வாழைத் தண்டு நார்ச்சத்து மிக்கது. வாழைத்தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சரியாகச் சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டைச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும்.

வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வீதம் நாள்தோறும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு தம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

வாழையின் உள் தண்டைச் சிறுசிறு துண்டுகளாக்கி வேரை நீக்கிச் சமைத்து உண்ண சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தாகம் தணியும்.

வாழைத் தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், இரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன், சேர்த்துச் சாப்பிட்டு வர, காமாலை நோய் குணமாகும். வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரைத் தடவத் தேள், பூரான் ஆகியவற்றின் கடியால் ஏற்படும் வலி குறையும்.

வாழைத் தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பித் தடவி வரத் தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். வாழைத் தண்டிற்குக் குடலி சிக்கியிருக்கும் மயிர், நஞ்சு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குணமுண்டு. வாழைப் பூவை வேகவைத்துப் பொரியல் செய்து உண்பதால் செரிமானமின்மை, நீரழிவு நோய் நீங்கும். குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்றுப் புழுக்களை ஒழிக்கும். பித்த நோய்களையும் இருமலையும் நீக்கும். வாழைப்பூச்சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்த மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும். கைகால் எரிச்சல், வெள்ளைப்படுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.

 

நன்றி : இனிய திசைகள் – ஜுன் 2014

 

News

Read Previous

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ? (PEN DRIVE)

Read Next

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞர் சாவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *