மத்தி மீன்..!!!

Vinkmag ad

மத்தி மீன்..!!!

தமிழக கடலோரப் பகுதிகளில் அதிகளவில் கிடைத்தாலும் இவைகள் பெருமளவில் கேரளாவிற்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது,

கேரளா மக்கள் இந்த மத்தி மீன்களின் மருத்துவ குணங்களை அறிந்து மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

மத்தி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர் நாகூர் மீரான், பேராசிரியர் கணேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள்.

ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல்வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. விலையும் மிக மலிவாக ரூ.15 முதல் ரூ.20க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.

100 கிராம் மத்தி மீனில்

புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ‘ஒமேகா 3‘ கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து

1. இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

2. தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

3. மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

4. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

5. சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

6. மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.

7. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

8. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

9. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய மருத்துவப்பயனுள்ள, விலை மலிவான மத்தி மீன்களை உண்ணும் வழக்கத்தை மக்கள் அதிகப்படுத்தி நோயின்றி வாழவேண்டும் இறைவன் உதவியால்.

News

Read Previous

தேசத்தின் பெருமிதம் அம்பேத்கர்!

Read Next

பளபளக்கும் சருமத்திற்கு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *