புற்றுநோய் வருவதற்கான காரணிகள்!

Vinkmag ad
புற்றுநோயைப் பற்றிய முழு விழிப்புணர்வானது அனைவருக்கும் இருப்பது என்பது மிகவும் அவசியம். ஏனெனில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் மற்றும் செயல்களை தினந்தோறும் மேற்கொள்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவற்றால் கூட புற்றுநோய் ஏற்படும் என்ற அறிவு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
• கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏனெனில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால், அவை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வேண்டுமெனில், மாத்திரைகளுக்கு பதிலாக வேறு கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய வருவதற்கான வாய்ப்பை தவிர்க்கலாம்.
• வீட்டில் இருக்கும் பெண்களை விட, நைட் ஷிப்ட் செல்லும் பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் நைட் ஷிப்ட் செல்வதை தவிர்ப்பது நல்லது.
• மௌத் வாஷில் எத்தனால் அதிகம் இருப்பதால், அதனைப் பயன்படுத்தினால், அது வாய் புற்றநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்கிறது. ஏனெனில் எத்தனாலானது வாயில் உள்ள திசுக்களை உடைத்து, புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்களை வாயில் எளிதில் ஊடுருவ வைக்கும்.
• பிரா அணிவதாலும் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக, ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். அதிலும் நாள் முழுவதும் பிரா அணிபவர்களுக்கு தான், மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார். ஆகவே தினமும் இரவில் படுக்கும் போது, பிராக்களை அணியாமல் இருந்தால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.
• டியோடரண்ட்டில் அலுமினியம் அதிகம் இருப்பதால், அது மார்பக புற்றுநோயுடன் தொடர்புடையதாக புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
• வைட்டமின் ஈ அளவுக்கு அதிகமாக உடலினுள் சென்றால், நுரையீரல் புற்றோய் வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் 77,000 மக்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், வைட்டமின் ஈ அதிகம் உள்ளோருக்கு புற்றுநோய்த் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் சொல்கிறது.

News

Read Previous

உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!

Read Next

சிறுகதைப் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *