நீரழிவு நோயாளிகளுக்கு “எச்பிஏ1சி” (HbA1c) இரத்தப் பரிசோதனை எவ்வளவு இன்றியமையாதது?

Vinkmag ad

நீரழிவு நோயாளிகளுக்கு “எச்பிஏ1சி” (HbA1c) இரத்தப் பரிசோதனை எவ்வளவு இன்றியமையாதது? இச்சோதனை வாயிலாக எத்தகைய முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்?

கிளைகேட்டட் ஹீமோகுளோபின் சோதனை (Glycated Haemoglobin Test) அல்லது ஹீமோகுளோபின் ஏ 1 சி சோதனை அல்லது எச்பிஏ1 சி சோதனை என்பது நீரழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை சரியான அளவில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள உதவும் சோதனை ஆகும். ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரத மூலக்கூறாகும். ஹீமோகுளோபின் நான்கு புரத மூலக்கூறுகளால் (குளோபுலின் சங்கிலிகள்) ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையுடன் இணைக்கப்பட்டு, கிளைகேட்டட் ஹீமோகுளோபின் (ஹீமோகுளோபின்-குளுக்கோஸ் கலவை) அல்லது ஹீமோகுளோபின் ஏ 1 சி எனப்படும் ஒரு பொருளை உருவாக்குகிறது.
நீரிழிவு நோய்க்கான நீண்டகாலக் கட்டுப்பாட்டின் அளவைக் கண்காணிக்க (long-term control of diabetes) இந்தச் சோதனை பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களில் இரத்தச் சர்க்கரை சராசரியாக எவ்வளவு இருந்திருக்கிறது என்று இந்தச் சோதனை முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். கிளைகேட்டட் ஹீமோகுளோபின் என்றால் என்ன? இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைக்கப்பட்ட குளுக்கோஸ் என்று புரிந்து கொள்ளலாம். சென்ற மூன்று மாத கால அளவில் இரத்தச் சர்க்கரை சராசரியாக எவ்வளவு இருந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் சோதனையாகும். இந்த எச்பிஏ1சி சோதனை, ‘வாய்வழி குளுகோஸ் சகிப்புச் சோதனை’ (Oral Glucose Tolerance Test – சுருக்கமாக OGTT) மற்றும் சீரற்ற பிளாஸ்மா குளுகோஸ் பரிசோதனை (Random Plasma Glucose Test சுருக்கமாக RPGT) ஆகிய சோதனைகளைக் கட்டிலும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

News

Read Previous

மாணவி ஜெயலட்சுமியின் ஒற்றை கேள்வி… ஊர் மக்களுக்கு 126 கழிப்பறைகள்

Read Next

மணமகள் தேவை

Leave a Reply

Your email address will not be published.