நல்ல தூக்கத்துக்கு …..

Vinkmag ad

Inline images 1

*தூக்கமின்மை சரியாக
சிலபேரு தூக்கமில்லாமல் தவித்துக்கொண்டே இருப்பார்கள். ஜாதிக்காயை பொடி பண்ணி, தினமும் காலையில ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும்.
*மனநலக் கோளாறு விலக
கீழாநெல்லினதும் மஞ்சகாமலைக்கு மருந்தெனத் தோன்றும். ஆனால், மனநலக்கோளாறை சரி பண்ற சக்தியும் அதுக்கு இருக்கு என்பது ஆச்சர்யம் தானே! கீழாநெல்லி சமூலத்தை (இலை, வேர், பூ, காய் என செடி முழுக்க) கல் உரலில் போட்டு (ஒரு கைப்பிடி அளவு), தண்ணி விட்டு மை மாதிரி அரைக்கணும். தொடக்கநிலை மனநலக் கோளாறு உள்ளவர்களோட தலையில், காலை நேரத்தில் இதைப் பூசணும். இரண்டரை மணியில் இருந்து மூன்று மணி நேரம் கழித்து, தலைக்குக் குளிக்கணும். இப்படி பதி னைந்து நாளைக்கு ஒரு தடவை செய்தால், நல்ல குணம் கிடைக் கும். மொத்தம் இரண்டு மூன்று தடவை செய்தாலே போதும் மனநலக் கோளாறு சரியாகும்.
*நினைவாற்றல் பெருக
திரிபலாவை (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோடு தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும். வல்லாரை இலைப் பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும். அமுக்கிராங்கிழங்கு சூரணம் இரண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ந்த திராட்சை ஒரு ஸ்பூன் எடடுத்து, 200 மில்லி பசும்பாலில் போட்டுக் காய்த்து, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம் புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வைத்துவிட வேண்டும். இதில் அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து காலை-மாலை என சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் கூடும். இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும். தேவைப்பட்டால் சிலநாள் இடைவெளி விட்டுத் தொடரலாம்



M.Lakshmanan.

00919080213233
00919344455566
 
Skype id:  lakshmanan17
Twitter: lakshmanan17

 

News

Read Previous

முதல் கோணல்

Read Next

தனியார் பேருந்தில் பயணித்தவரின் கை முறிந்தது: ஓட்டுநர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *