சர்க்கரையை கட்டுப்படுத்தும் விராலி இலை

Vinkmag ad

சர்க்கரையை கட்டுப்படுத்தும் விராலி இலை

 

மலைப்பாங்கான இடங்களில் அதிகம் காணப்படும். இது வெப்பத்தை நன்கு தாங்கி வளரும் மரமாகும். ஜூடோனியா விஸ்கோசா என்ற தாவரப்பெயரை கொண்டதாக விளங்குகிறது.  இந்த செடி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்கி வருகிறது. இதன் சாற்றை பயன்படுத்திபாதரசத்தை மாற்றக் கூடிய வேதிப் பொருளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

நோய் எதிர்பபு சக்தி கொண்டதாக, நுண் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டதாக, சிறுநீரில் உண்டாகும் சர்க்கரையை கட்டுப்படுத்துவதாகவிராலி அமைகிறது. பூஞ்சை கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டதாகவும் விராலி விளங்குகிறது. இதன் இலையை மென்று சிறிது நேரம்வாயில் வைத்திருப்பதால் பல் வலி, பல் கூச்சம் ஆகியவை நீங்குகிறது. விராலியின் பட்டையை பயன்படுத்தி காய்ச்சலை போக்கக் கூடிய ஒருமருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் விராலி மரப்பட்டை, மிளகு, விராலி செடியின் பட்டைகளை 5 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

5 முதல் 10 மிளகு வரை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகை பொடித்து சேர்த்துக் கொள்ளவும்.  சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பருகுவதால் காய்ச்சல், இருமல், சளி போன்றவை நீங்குகிறது. விராலி இலைபேதியை நிறுத்தக் கூடிய தன்மை கொண்டதாகும். ரத்த கசிவை கட்டுப்படுத்தக் கூடியதாகும்.  காய்ச்சலை போக்கக் கூடியது.

இது உடலில் இருந்து வியர்வையை வெளிப்படுத்தக் கூடியது. இதனால் உடல் வெப்பம் தணிகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. உடல்உறுப்புகளுக்கு புத்துணர்வை கொடுப்பதாக, ஊக்கத்தை தருவதாக விராலி அமைகிறது. உடல் உறுப்புகளை தூண்டி சரியாக வேலை செய்யக்கூடியதாக மாற்றுகிறது. ஒவ்வாமையை போக்கக் கூடிய தன்மை விராலிக்கு நிறைய உள்ளது. விராலியை பயன்படுத்தி ஆறாத புண்களுக்குமருந்து ஒன்றை தயாரிக்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் விராலி இலைகள், சீரகம், மஞ்சள் பொடி. ஒரு பிடி அளவு இலைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன்அளவு சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி. இதனுடன் நீர் விட்டு இலைகள் நன்றாக வேகும் வரை கொதிக்க விட வேண்டும். இதை நன்றாகவடிகட்டிக் கொள்ள வேண்டும். தினமும் காலை மாலை இரு வேளையும் உணவுக்கு முன்பாக 50 மிலி வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை அளவை வெகுவாக குறைக்கிறது. மேலும் ஆறாத புண்களையும், கட்டிகளையும் கரைக்கும்தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது

 

News

Read Previous

மின்னூல்

Read Next

திருநங்கை

Leave a Reply

Your email address will not be published.