உறுப்புகளின் அறிகுறிகள் !

Vinkmag ad

உறுப்புகளின் அறிகுறிகள் !

நமக்கு என்னென்ன நோய் என்பதை நம் உறுப்புகளின் அறிகுறிகள் மூலமே தெரிந்து கொள்ளலாம்:-

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? :

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேறமுடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். தீர்வு : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி .. என்ன வியாதி?:

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. தீர்வு : போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?:

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த அழுத்தத்தால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்குத் தவறான தகவல்களை அனுப்பி விடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது. தீர்வு : எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி? :

நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. தீர்வு : குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும் கீழும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி? :

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருந்தும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதயக் கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று மருத்துவர்களுக்கே இன்னும் சரிவரப் புரியவில்லை என்று கூறுகிறார்கள். தீர்வு : அதிகப்படியான மன அழுத்தம் ஹார்ட்அட்டாக் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதைப் பாரமில்லாமல் இலேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சனைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி? :

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், இரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

தீர்வு : ஒரு நாளைக்கு எட்டுக் குவளை தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர்க் குடுவையை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுதல் :

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. தீர்வு : அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சனை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

 

 

நன்றி :

இனிய திசைகள் – ஜனவரி 2015

News

Read Previous

தேசிய நுகர்வோர் உரிமை தின விழா

Read Next

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *