உடல் இளைக்க

Vinkmag ad

உடல் இளைக்க :-

ஓமம் – 100 கிராம்
சுக்கு – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
வாய்விளங்கம் – 100 கிராம்
பெருங்காயம் – 20 கிராம்
மலைப்பூண்டு – 200 கிராம்
கருப்பட்டி – 600 கிராம்

ஒவ்வொன்றையும் தனித்தனியே சுத்தி செய்துக் தூள் செய்து கொள்ள வேண்டும்.

கருபட்டியை தூள் செய்து உரலில் போட்டு, பூண்டு பருப்பை போட்டு சேர்த்து இடித்து, கடை சரக்குகளை ஒவ்வொன்றாக போட்டு மர உலக்கையால் இடித்து லேகியம் ஆக்கவும்.

இந்த லேகியத்தை அருநெல்லி அளவு காலை மற்றும் இரவு நன்றாக உமிழ் நீருடன் சப்பி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடிக்கவும்.

பயன்கள் : உடலில் தேங்கியுள்ள சகலவிதமான நீர்கட்டுகளும், சதைகளில் இறுகியுள்ள கொழுப்புகள், எலும்புகளில் தேங்கியுள்ள கொழுப்புகள், நுரையீரலில் தேங்கியுள்ள சளியும், கொழுப்பும் வெளியேறும். உடல் வற்றும்.

தேவையான கனம் குறைந்த உடன் மருந்தை நிறுத்தி விடவும்.
பத்தியம் : உருளைக் கிழங்கு, பூசணிக்காய், நீர்சத்தும், கொழுப்புசத்தை உருவாக்கும், ஐய், சோடா, கலர், எண்ணை பலகாரம், புலிக் குழம்பு நீக்கவும்.

தகவல் :- வைத்தியர் மாலிக்

News

Read Previous

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

Read Next

ஒரு நிமிடக் கதை: அம்மா

Leave a Reply

Your email address will not be published.