கீழச்சிறுபோது ஜனாப்.திரு.எம்.ஏ. ஜமால் முகமது

Vinkmag ad

maகீழச்சிறுபோது ஜனாப்.திரு.எம்.ஏ.
ஜமால் முகமது அவர்கள்
—————————
பாாி பாாி என்று பலஏத்தி

ஒருவா் புகழ்வா் செந்நாப் புலவா்

பாாி ஒருவனு மல்லன்

மாாியும் உண்டீண் டுலகு புறப்பதுவே”

என்ற புறநானூற்றுப் பாடலில் மழைக்கு நிகராக பாரியை புகழ்வர்…

கீழச்சிறுபோது ஜனாப் திரு எம்.ஏ.ஜமால் முகமது அவர்கள் எங்கள் கிராமத்தில் வாழ்ந்த பாரி என்றால் மிகையாகாது.

ஆங்கிலேயருக்கு நிகரான மேனி வண்ணம்,நடுத்தர உயரம்,மேலை நாட்டு வாசனைத்திரவியம் நறுமணம் இது இவர் அடையாளம்..

எங்கள் குக்கிராமத்தில் பிறந்து பன்னாட்டு வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர் ..

எங்கள் ஊரில் பிறந்து
ஆரம்ப கல்வி மட்டுமே பயின்று தனது சாதூரியத்தால் எல்லைகளை விரித்த
திறமைசாலி…

எவ்வளவோ தொழில் சம்பந்தமான கடமைகள் இருந்தாலும் எங்கள் கிராமத்தில் வருடம் இரண்டு மாதங்கள் தங்குவது அவர் தலையாய பண்பு..

” லத்தீபு அத்தா” என்று தான் ஊரே அழைப்பர்..
இந்தியாவில் எப்போது தொலைக்காட்சி அறிமுகமானதோ அன்றே எங்கள் கிராமத்திற்கு அறிமுகமாக்கியவர்…

இரண்டு பேர் சேர்ந்து வீடு வந்தாலே வாசலிலே வைத்து அனுப்பி விட்டு நிம்மதி பெருமூச்சு விடும் இந்த காலத்தில் அவர் 1970 களில் செய்த செயல்கள் நினைவில் வந்து அவரை மலையென உயர்ந்து நிற்க வைக்கிறது..

எங்கள் கிராமத்தின் நேரு மாமா அவர்கள்.
அவரைச் சுற்றி 20 முதல் 30 சிறுவர்கள் இருப்போம்.. அதில் நானும் ஒருவன்.

ஆரம்ப எண்பதாம் ஆண்டு அவர் வீடியோ வை எங்கள் ஊருக்கு அறிமுகம் செய்தார்..

அவர் வீடு ஒரு சினிமா தியேட்டரைவிட பெரியது ..

முதலில் அனைவரும் வரிசையாக வாருங்கள் என்பார்..ஒரு இருநூறு பேர் ஒரே நேரத்தில் அவர் வீட்டுக்குள் அமர்ந்து இருப்போம் என்றால் அவர் தியாகத்தை உங்கள் சொந்த கற்பனைக்கு விட்டு விடுகிறேன்…

தினமும் இரண்டு காட்சிகள்…

ஊர் முக்கிய பிரமுகர்கள், கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு சிறப்பு வழி உண்டு…

ஒருநாள் முந்தானை முடிச்சு படம் ..கூட்டம் அதிகம் .பாதிப்பேர் வீட்டுக்கு வெளியே நின்று வசனத்தை மட்டுமே கேட்டு ரசிக்கின்றனர்..உடனே ஒரு காரியத்தை செய்தார். திரைப்படத்தை நிறுத்தி விட்டு அனைவரையும் வெளியே வாருங்கள் என்றார்.. யாருக்கும் புரியவில்லை.. தொலைக்காட்சியை வீட்டிக்கு வெளியே வைத்து வீட்டின் முன்பு உள்ள மைதானத்தில் அனைவரையும் அமர்ந்து பார்க்க செய்தார்….

இவர் செயல்களுக்கு எப்பவும் துணை நிற்கும் துணைவியார் மரியாதைக்குரிய குபிரா பேகம் அம்மா அவர்கள் அதே தகுதிக்குரியவர்தான்.

சினிமா அரங்கம் எங்கள் ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர்.
தியேட்டர் சென்று படம் பார்ப்பது சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்களுக்கு சாத்தியமில்லை..
அந்த உழைக்கும் மக்களுக்கு அலுப்பு மருந்தாகவும், பள்ளி சிறுவர்களுக்கு பொழுதுபோக்காகவும் அவரின் உதவி இருந்தது….

எங்கள் ஊரில் நாங்க பார்த்த படம் இரண்டு வருடங்களுக்கு பின்புதான் அருகிலுள்ள தியேட்டருக்கு வரும் என்பது கூடுதல் தகவல்.

இவர் பொருளீட்டி முடித்து உலகின் எந்த நகரிலும் தங்கி காலத்தை கழித்திருக்க முடியும்.. ஆனால் எங்கள் கிராமத்திற்கு வந்து ஜமாத் தலைவராகி தன் சொந்த பணத்தில் பொதுநலன் ஆற்றினார்…

மதுரையில் பணி நிமித்தமாக தங்கிவிட்ட நான் எப்போதாவது கிராமம் செல்வேன். அப்படி ஒரு நாள் இரவு ஏழு மணி இருக்கும் என் வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தேன் ..
சேதுமுத்து அப்பத்தா மூச்சிறைக்க ஓடிவந்து லத்தீப் அத்தாவுக்கு முடியவில்லை வா என்றதும் அவர் வீடு நோக்கி ஓடினேன்..

வீட்டுக்கு வேளியை நாற்காலியில் சரிந்து கண்கள் பாதி மூடி , உடம்பெல்லாம் வியர்த்து இருந்தார்…

எப்போதும் இரண்டு மோதிரத்துடன் இருக்கும் இடது கையில் நாடித்துடிப்பை பார்க்க எனது வலது கையை வைத்தேன்..

இமயத்தின் இதயம் இயக்கத்தை நிறுத்தி கொண்டு இருந்தது..

அவரை தூக்கி வைத்து முதுகுளத்தூர் ஓடிய கார் பெரிய அழுகை சத்தத்துடன் கிராமத்திற்குள் நுழைந்தது…

வருடம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே ஊரில் தங்கும் அன்று இருந்தது, என் இளமைப் பருத்தை பயிர் செய்த ஒரு பண்பாளரின் கடைசி நிமிடம் அவர் கையை பிடித்து கொண்டு இருந்தது என் பாக்கியமாக கருதுகிறேன்…

ஜனாப் திரு.எம்.ஏ.ஜமால் முகமது அவர்கள் சில பொன்மொழிகளை ஊர் மக்கள் அனைவருக்கும் எழுதி வைத்துள்ளார்…

அதில் பிரதானம்…

” பிறருக்கு உதவி செய்”

இப்போதும் நான் கீழச்சிறுபோது சென்றால் இந்த வாசகங்களை படிக்கும் போது அவரும் அவர் எங்களுக்கு காட்டிய படங்களும் பாடங்களாக நினைவில் வருகிறது..
பா.திருநாகலிங்க பாண்டியன்

கீழச்சிறுபோது.

News

Read Previous

கல்வி அகதிகள்

Read Next

தண்ணீருக்கும் குளிர்பானங்களுக்கும் தேவை தரநிர்ணயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *