ஹம்பக்

Vinkmag ad
ஹம்பக் எனப்படும் திமிங்கில வகையானது ஆழமான மற்றும் துருவ பகுதிகளை ஒட்டிய கடலில் அதிக அளவில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் ஆழம் குறைவான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும்.
அவ்வாறு ஒரு ஆண்டில் சுமார் 25 ஆயிரம் கிலோமீட்டர்கள் இந்த திமிங்கிலங்கள் பயணம் செய்ய கூடியவை.
உலகில் மொத்தம் 80 ஆயிரம் திமிங்கிலங்கள் மட்டுமே இந்த வகையில் உள்ளது.
உருவத்தில் மிகப்பெரிய இந்த திமிங்கிலங்கள் குறைந்தபட்சம் 40 அடி முதல் 52 அடி வரை நீளமுள்ளவை. இதன் எடை 36 ஆயிரம் கிலோவாகும்.
இந்த திமிங்கிலங்களில் ஆண் வகை ஒரு வகை சப்தம் எழுப்பி பெண் திமிங்கிலத்தை இனச்சேர்க்கைக்கு அழைக்கும். இது தொலைவில் இருந்து பாட்டு சத்தம் கேட்பது போன்று இருக்கும். இதுபோல தொடர்ந்து 20 நிமிடங்கள் இந்த திமிங்கிலங்கள் பாடும்.
ஆனால் கப்பலில் மிக அருகில் இதன் சத்தத்தை கேட்கும்பொழுது அது மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை கடலில் ஏற்படுத்துகிறது. இதனால் சிறிய வகை படகுகள் அதிக அளவில் விபத்துகளுக்குள்ளாகும்.

News

Read Previous

விடுதலை அடிமைகள்!

Read Next

சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *