விடுதலை அடிமைகள்!

Vinkmag ad

விடுதலை அடிமைகள்!

ஒருவரை ஒருவர் அடிமை யாக்கும்
குறுகிய மனமும் தழைக்கிறதே!
அருகிடா அன்பை அள்ளி வழங்கும்
அழகிய நெஞ்சம் அழிகிறதே!

அரவம் வாயில் தவளையின் நிலையாய்
அரசியல் வாதியால் ஆனோமே;
வரவுக ளெல்லாம் வாய்க்க ரிசியாய்
விழுந்தே பிணமாய் ஆனோமே!

உறவுக ளெல்லாம் உயிரைப் பிடுங்கும்
எமன்க ளாகவே மாறினரே;
அறத்தை விலைக்கு விற்று அவரவர்
அடிமைக் குழியில் விழுந்தனரே!

நாட்டை யாளும் நாய்க ளெல்லாம்
நம்மை அள்ளித் தின்றனரே;
ஆட்டின் கழுத்தை அறுப்பது போலவே
அடிமை யாக்கி அறுக்கிறாரே!

மக்களின் வியர்வையை சுவிசு வங்கியில்
மாசென மறைத்து வைத்தனரே;
தக்கைப் போலவே மிதக்க விட்டு
சக்கை யாகப் பிழிந்தனரே!

வீட்டில் நாட்டில் எங்கும் அடிமை;
விடுதலை எங்கே காணலையே;
கூட்டமாய் நாமும் கூடியே அடிமையைக்
கொளுத்தி விடுதலைப் பெறுவோமே!

நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.

News

Read Previous

ஒரு பிரபல விஞ்ஞானி…..

Read Next

ஹம்பக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *